முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஸ்டாலினால் தமிழகத்திற்கு தலைகுனிவு - அதிமுக குற்றச்சாட்டு

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன்  இன்று செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்பொழுபோது அவர் கூறியதாவது :


புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கி உள்ளது. இந்த அனுமதியை பெற்ற முதலமைச்சர் ரங்கசாமிக்கும், புதுச்சேரி மாநில ராஜ்யசபா உறுப்பினர் செல்வகணபதி அவர்களுக்கும் அதிமுக சார்பில் பாராட்டுத்தலை தெரிவித்துக் கொள்கிறோம். 

அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு மத்திய மருத்துவ கவுன்சில் அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து ஆளுநர் தமிழிசை உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தார். சம்பந்தப்பட்ட அதிகாரியான தலைமைச் செயலர், சுகாதாரத் துறை, செயலாளர் ஆகியோரின் பொறுப்பற்ற தன்மையால் இந்த ஆண்டு ஆரம்பத்தில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 
எனவே தலைமைச் செயலாளர் மீது துணைநிலை ஆளுநர் கூறியது போல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

 இந்த ஆண்டு புதுச்சேரி மாநிலத்தில் மூன்று தனியார் மருத்துவ கல்லூரிகளிலும் ஏற்கனவே இருந்த 150 இடங்களுடன் ஒவ்வொரு மருத்துவ கல்லூரியும் 100 இடங்கள் கூடுதலாக பெற்றுள்ளன. இதில் தேசிய மருத்துவ கவுன்சில் உத்தரவுப்படி, மத்திய அரசின் சுகாதாரத்துறை ஆணையின்படி 650 இடங்களில் சட்டப்படி 50 சதவீதமான இடங்களை அரசு பெற்று சுமார் 325 இடங்கள் அரசு இட ஒதுக்கீடாக அரசு அறிவித்திருக்க வேண்டும். ஆனால் இப்போது 36.4 சதவீதம் இடங்களை பெற்று 239 இடங்கள் அரசு இட ஒதுக்கீடாக அறிவிக்கப்பட்டுள்ளது. நமக்கு கிடைக்க வேண்டிய இடங்கள் கிடைக்க பெறாமல் தனியார் மருத்துவ கல்லூரிக்கு சாதகமான நிலைப்பாட்டை அரசு எடுத்துள்ளது. 

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு புதுச்சேரி அரசின் ஒட்டுமொத்த நிறுவனத்தையும் தங்களது கையில் வைத்திருக்கும் துணை நிலை ஆளுநர் அவர்கள் மருத்துவம் பயின்றவருமான அவர் 86 மாணவர்கள் பயன்பெறாத வகையில் மாணவர்களுக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய துரோகச் செயலாகும்.
தனியார் மருத்துவ கல்லூரியில் 50% அரசின் ஒதுக்கீட்டை பெறாதது ஏன் என்ற அதிமுகவின் குற்றச்சாட்டுக்கு துணை ஆளுநர் உரிய பதிலளிக்க வேண்டும். 

கடந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் காலி பணியிடங்கள் எதுவும் நிரப்பப்படவில்லை. தற்போது ஆட்சியில் அமைத்துள்ள எங்கள் கூட்டணி அரசில் காலி பணியிடங்கள் அனைத்தும் நிறப்பப்பட்டு வருகிறது நியமன விதியின் படி எல்.டி.சி, யூடிசி பணியிடங்கள் நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் திமுக காங்கிரஸ் கட்சியினர் பணி நியமன விதியை தடுத்துக் கொண்டு வருவதால் படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்காத சூழ்நிலை உருவாகி வருகிறது. யூடிசி பணியில் பணி நியமன விதியில் 100 காலி பணியிடங்கள் என்றால் அதில் 20 பணியிடங்களை பணி மூப்பு அடிப்படையில் நிரப்ப வேண்டும் என பணி நியமன ஆணை வெளியிடப்பட்டது. ஆனால் தற்போது காலி பணியிடங்களும் அதே பணி நியமன ஆணையின் படி நிரப்ப வேண்டும் என கூறி வருகின்றனர். எனவே முதலமைச்சர் ரங்கசாமி பணி நியமன விதியில் மாற்றம் செய்யாமல் ஏற்கனவே உள்ள பணி நியமனம் விதியின்படி காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். எதிர் கட்சிகளின் பாசப்ப வார்த்தைகளுக்கு செவி சாய்க்க கூடாது.

தற்போது பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தில் இருந்து வட இந்தியாவிற்கு சென்று கூட்டணி பற்றி பேச சென்றிருப்பது தமிழகத்திற்கும் தலைகுனிவாகும். எங்களது அதிமுக முதலமைச்சராக மாண்புமிகு அம்மா அவர்கள் ஆட்சியில் மற்ற மாநிலங்களை சார்ந்த முதலமைச்சர்கள் தமிழகத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்த வந்தனர். ஆனால் தற்போது மக்கள் விரோத விடியா தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணிக்காக பேசுவதற்கு வடமாநிலத்திற்கு சென்று வந்திருப்பது தவறான ஒன்று.
எனவே வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள்.


கோவில் நிலம் அபகரிப்பு செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். அதில் சார்பதிவாளர் அவர்களையும் கைது செய்துள்ளனர்.. அப்பொழுது அவர் என்னுடைய மேலதிகாரி உத்தரவுபடி தான் நானும் அனுமதி கொடுத்ததாக கூறியுள்ளார். எனவே அந்த மேல் அதிகாரிகள் யார் அவர்களின் நடவடிக்கை எடுக்காது ஏன்? எனவே கோவில் நிலத்தை போலி பத்திரம் மூலம் அபகரிக்கும் நோக்கத்தோடு செயல்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த பிரச்சனையை விசாரிக்கும் போதே பாஜக எம்எல்ஏ ஒருவர் தலையிட்டு கோவில் நிலத்தில் எந்த பிரச்சனையும் இல்லை அப்படி இருந்தால் நான் ஒரு கோடி ரூபாய் தருவதாக கூறினார். அப்படி என்றால் அந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் தான் அறிவித்தபடி அந்த ஒரு கோடி ரூபாயை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்க முடியுமா? புதுச்சேரியில் திட்டமிட்டு சட்டமன்ற உறுப்பினர் இது போன்ற தவறான செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இதனை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 
பேட்டியின் போது மாநில கழக பொருளாளர் ரவி பாண்டுரங்கன், மாநில கழக துணைச் செயலாளர் நாகமணி ஆகியோர் உடனிருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...