புதுவை மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன் விடுத்துள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநில அரசு கலை அறிவியல் கல்லூரி கழிவறை தரமற்ற முறையில் கட்டப்பட்டதால் மேற்கூரை இடிந்து விழுந்து மாணவி ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். சராசரியாக ஒரு வீடு தரமாக கட்டினால் 50 ஆண்டுகள் வரை உறுதியாக இருக்கும். ஆனால் அரசு கட்டிடங்களில் ஊழல்கள் நிறைந்துள்ளதால் பத்தாண்டுகள் தாங்குவது அரிதாக உள்ளது. பாதுகாப்பாற்ற சூழ்நிலையில் பல அரசு பள்ளிகள், கிராமப்புறம் மற்றும் நகர் புறத்தில் இதே போல் நிலைமை நீடித்து வருகிறது. உடனடியாக அரசு பழைய கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டிடங்களை கட்ட வேண்டும். புதுவையில் இதுவரை ஆட்சி செய்த அரசுகளும், தற்போது ஆளுகின்ற அரசும் புதுச்சேரி மக்கள் மீது அக்கறையில்லாமல், நிதி இல்லை என்று ஒவ்வொரு முறையும் காரணம் காட்டிவருகிறது. இதுவரை புதுச்சேரியில் ஆட்சி அரசுகளும், தற்போது ஆட்சி செய்துவரும் அரசாங்கமும், நிதியை தேவையற்ற முறையில் செலவு செய்து வருகிறது. புதுச்சேரி சட்டமன்றத்தில் அரசு பல கோடி ரூபாய்க்கு புதிய கார்களை வாங்கி சொகுசாக பயணம் செய்து வரும், அனைவரும் அரசு பள்ளி கட்டிட...
உண்மை செய்திகளை வழங்குவது, துல்லியம் தவறாமல் செய்தி அளிப்பது, துணிவோடு செய்திகளை வெளிப்படுத்துவது.