புதுவை மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன் விடுத்துள்ள அறிக்கையில்,
புதுச்சேரி மாநில அரசு கலை அறிவியல் கல்லூரி கழிவறை தரமற்ற முறையில் கட்டப்பட்டதால் மேற்கூரை இடிந்து விழுந்து மாணவி ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். சராசரியாக ஒரு வீடு தரமாக கட்டினால் 50 ஆண்டுகள் வரை உறுதியாக இருக்கும். ஆனால் அரசு கட்டிடங்களில் ஊழல்கள் நிறைந்துள்ளதால் பத்தாண்டுகள் தாங்குவது அரிதாக உள்ளது. பாதுகாப்பாற்ற சூழ்நிலையில் பல அரசு பள்ளிகள், கிராமப்புறம் மற்றும் நகர் புறத்தில் இதே போல் நிலைமை நீடித்து வருகிறது. உடனடியாக அரசு பழைய கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டிடங்களை கட்ட வேண்டும். புதுவையில் இதுவரை ஆட்சி செய்த அரசுகளும், தற்போது ஆளுகின்ற அரசும் புதுச்சேரி மக்கள் மீது அக்கறையில்லாமல், நிதி இல்லை என்று ஒவ்வொரு முறையும் காரணம் காட்டிவருகிறது. இதுவரை புதுச்சேரியில் ஆட்சி அரசுகளும், தற்போது ஆட்சி செய்துவரும் அரசாங்கமும், நிதியை தேவையற்ற முறையில் செலவு செய்து வருகிறது. புதுச்சேரி சட்டமன்றத்தில் அரசு பல கோடி ரூபாய்க்கு புதிய கார்களை வாங்கி சொகுசாக பயணம் செய்து வரும், அனைவரும் அரசு பள்ளி கட்டிடத்தை சிந்தித்து பார்த்திருந்தால் பழைய வாகனங்களை பயன்படுத்திவிட்டு, அந்த பணத்தில் ஒவ்வொரு தொகுதி வாரியாக புதிய கட்டிடத்தை புதிய கழிவறைகளை தொலைநோக்கு பார்வையுடன் புனரமைப்பு செய்யலாம். இந்த விஷயத்தில் எதிர்க்கட்சி மற்றும் ஆளுங்கட்சி இணைந்து செயல்படுவதால் பொதுமக்கள், மாணவர்கள் உட்பட பல்வேறு சமுதாயத்தினர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
ஆனால் நல்லவர்களை, படித்தவர்களை மக்கள் தேர்தலில் தேர்வு செய்யவில்லை.
அரசு பள்ளியில் சிபிஐ முறையை கொண்டு வந்தும், தகுதியான ஆசிரியர்கள் இருந¢தும், போதிய கட்டமைப்பு ¢இல்லாததால் பொதுமக்கள் தனியார் பள்ளிகளை நோக்கி செல்கிறார்கள். இந்த நிலைமை மாற வேண்டும். ஆளுநர் அவர்கள் தலையிட்டு பல்வேறு பள்ளிகளை சோதனை செய்து, மாணவர்களை பாதுகாக்க வேண்டும். புதுச்சேரியில் உள்ள அனைத்து மது கடைகளும் ஏசி செய்யப்பட்டு அருங்காட்சியம் போலும், பல அரசு பள்ளிகள் மாட்டுக்கொட்டாய் போல் காட்சியளிக்கிறது.
எது முக்கியம் என்பது எந்த அரசுக்கும் தெரியவில்லை.
காமராஜர் ஆட்சி என்று சொல்லும் அனைவரும் காமராஜருடைய வரலாற்றை முழுமையாக படிக்க வேண்டும். நிதி சிக்கனத்தை நேர்மையை மக்களுக்காக அவர் ஆற்றிய தியாகத்தை காமராஜரிடம் பாடம் கற்க வேண்டும். பெயரளவில் காமராஜர் பெயரை பயன்படுத்துவது அவருக்கு செய்யும் துரோகம். அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளின் கட்டிடங்களை பராமரிக்க குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். ஊழல் மிகுந்த ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோ¢ல் அரசு பள்ளிகளை கட்டும் ஒப்பததாரர்கள் கட்டிடத்தின் உறுதிக்கும், எத்தனை ஆண்டுகள் நீடிக்கும் என்ற உத்தரவாதம் தரவேண்டும். அதுபோன்று உத்தரவாதம் அளித்தும் ஒப்பததாரர் குறிப்பிட்ட காலத்திற்குள் அவர் கட்டிய அரசு பள்ளி கட்டிடம் பழுதானால், அந்த ஒப்பந்ததாரர் மீது வழக்கு தொடுத்து, அதற்குண்டான தொகையை அவரிடமே வசூலிக்க வேண்டும். சுனாமி குடியிருப்பில் ஊழல் மற்றும் தற்போது பல பகுதியில் போடப்பட்ட சாலை தரமற்றதாக உள்ளது. இவற்றை ஆளுநர் கண்காணித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் ஒட்டுமொத்த மக்களும் அநீதிக்கு எதிராக போராட முன்வர வேண்டும்.
நன்றி
ஏன் ஐயா யாருமே பல வருடமா எடுக்காத, அரசுத்துறைகளில் காலியாக உள்ள அரசு பணியிடங்கள் நேர்முக தேர்வுக்கான வயது வரம்பு தளர்வுக்கு பேச மாட்றீங்க.
பதிலளிநீக்கு