முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அரசு அறிவித்துள்ள ஹெல்மெட் கட்டாய உத்தரவை வாபஸ் பெற வேண்டும் -அதிமுக வலியுறுத்தல்..!

புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla., வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பதவி வரும்போது பணிவும், பதவி பெற்ற பின் அளித்த வாக்குறுதிகளும் நினைவுக்கு வரவேண்டும். பதவிக்கு வருவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு, அளித்த வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிடுவது மக்களை வேதனையில் ஆழ்த்தும். என்ஆர்.காங்கிரஸ் அளித்த தேர்தல் வாக்குறுதியில் நகராட்சி எல்லைக்குள் ஹெல்மெட் அணிவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என அறிவித்திருந்தது. தற்போது நாளை நவம்பர் 1ம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். அந்த வாகனத்தில் பின் இருக்கையில் அமர்ந்து செல்வோரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் போக்குவரத்து போலீசார் அபராதம் வசூலிப்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றாட கூலி தொழிலாளர்கள், நடுத்தர மக்கள், சொற்ப சம்பளத்தில் பணியாற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் தங்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த பொருளாதார போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்திருப்பது வெந்த புண்ணில் வேல் ப...

பெருமழையை கருத்தில் கொண்டு அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் வேண்டும் என அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்

புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக பகுதியில் ஒரு சில மாவட்டங்களில் இன்று கன மழை பெய்து வருகிறது. நவம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்ற அறிவிப்பை வானிலை அறிவித்துள்ளது.  புதுச்சேரியில் பெய்யப்படும் கனமழையை எதிர்கொள்ளும் விதத்தில் சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி துறை ஆகியவை இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த இரு ஆண்டுகளாக அவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படாததால் நகரப் பகுதி முழுவதும் மழை நீர் தேங்கி மக்கள் சொல்லொன்னா துயரத்திற்கு ஆளாக்கப்பட்டனர்.இரு சக்கர வாகன ஓட்டிகள் சாலைகளில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. பெருமழையால் விழுந்த மரங்களை அப்புறப்படுத்த கூட உரிய மரம் வெட்டும் இயந்திரங்கள் இல்லாமல் துறை ஊழியர்கள் சிரமத்திற்கு ஆளாக்கப்பட்டனர். ...

காமராஜர் மணிமண்டபத்தில் துப்புரவு பணி..!

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மக்கள் சேவை மையம் சார்பில் காமராஜர் மணிமண்டபத்தில் துப்புரவு பணி நடைபெற்றது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மக்கள் சேவை மையத்தின் நிறுவனரும்,முன்னாள் ராணுவ வீரருமான டாக்டர் சசிகுமார் தலைமையில், மையத்தின் நிர்வாகிகள் புதுச்சேரி முழுவதும் பல்வேறு சமூக பணிகளை செய்து வருகின்றனர். மாணவர்களுக்கு தேசப்பற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, தவறான பாதையில் செல்லும் இளைஞர்களை நல்வழிப்படுத்துவது என சுபாஷ் சந்திரபோஸ் மக்கள் சேவை இயக்கம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மக்கள் சேவை மையத்தின் மாணவர்கள் மற்றும் பாத்திமா மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் இணைந்து காமராஜர் மணி மண்டபத்தில் துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டனர். முன்னாள் ராணுவ வீரர் டாக்டர் சசிகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பாத்திமா பள்ளி தலைமை ஆசிரியர், நாட்டு நலப்பணித்திட்ட ஆசிரியர், புதுச்சேரி நேஷனல் கிக் பாக்ஸிங் சங்கத் தலைவர் அசோக் ஆகியோர் கலந்து கொண்டு துப்புரவு பணியை துவக்கி வைத்து வாழ்த்தினர். ...

சர்வாதிகாரி, கொடுங்கோல் ஆட்சியில் கூட இப்படி ஒரு திட்டத்தை வகுக்க முடியாது..! புதுச்சேரி அரசுக்கு அதிமுக கண்டனம்..!

புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் 10 தொழிலாளர்களுக்கு மேல் பணியாற்றும் கடைகள், வணிக நிறுவனங்கள், விடுதிகள், உணவகங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களையும் 24 மணி நேரமும் திறந்து வைக்கலாம் என அதிமேதாவித்தனமான அறிவிப்பை அரசின் சார்பு செயலர் வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பின் முழு நோக்கமும் இரவு நேரத்தில் மதுபான கடைகளை திறப்பது ஒன்று மட்டுமே குறிக்கோளாக கொண்டது. அரசியல் ஆதாயத்திற்காகவும், சாராய வியாபாரிகளை திருப்திப்படுத்தவும், மக்களைப்பற்றிய சிந்தனை துளியும் இன்றி சுயநல லாப நோக்கோடும்தான் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். புதுச்சேரி மக்களின் உயிர் பிரச்சினைக்காக அரசு மருத்துவமனைகள் கூட 24 மணி நேரமும் செயல்படுவது இல்லை. இரவு நேரங்களில் டாக்டர்கள் பணியில் இருப்பதில்லை. அரசு மருத்துவக்கல்லூரியில் அவசர சிகிச்சை அரைநாளோடு மூடப்படும் அவலம் நிலவுகிறது. இரவில் விபத்தில் சிக்குபவர்களுக்கு அவசர சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. அத்தியாவசிய தேவையான மருந்துக...

புதுச்சேரியில் தங்கு தடையின்றி வந்து செல்லும் தீவிரவாதிகள்..! அதிமுக பகீர் குற்றச்சாட்டு..!

புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் அவர்கள் தலைமை கழகத்தில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது : தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் தீவிரவாத செயல்களின் மீது உரிய நடவடிக்கையை எடுக்காமல், மதத்துடன் சம்பந்தப்படுத்தி ஓட்டு வங்கிக்காக அற்ப அரசியல் லாபம் தேடும் முயற்சியில் தமிழக திராவிட முன்னேற்றக் கழக அரசு ஈடுபட்டுள்ளது கண்டிக்கத்தக்க ஒன்றாகும். கோவையில் நடைபெற்ற பயங்கரவாத சம்பவத்தை குறிப்பிட்ட மதத்தின் மத குருவே தீவிரவாதிகளின் மீது தமிழக அரசு பாரபட்சம் காட்டாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தும் சூழ்நிலையை திமுக அரசு ஏற்படுத்தி வருகிறது. தீவிரவாதம், எல்லை தாண்டிய பயங்கரவாதம் செயல்களை கட்டுப்படுத்தி அதை முற்றிலுமாக ஒடுக்கும் முயற்சியாக நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் தேசிய புலனாய்வு முகமை என்.ஐ.ஏ கிளை அமைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் தற்பொழுது அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பின்படி மற்ற மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமையின் கிளை அமைக்கப்படும் பொழுது யூனியன் பிரதேசமான புதுச்...

பாஜக பிரமுகர் சீனிவாசன் பிறந்தநாள் விழா.. அமைச்சர் நமச்சிவாயம் வாழ்த்து..

வில்லியனூர் தொகுதி பாஜக பிரமுகர் சீனிவாசன் பிறந்தநாளையொட்டி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேரில் சென்று சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் புதுச்சேரி பாரிஸ் கார்னர் உரிமையாளரும் வில்லியனூர் தொகுதி தட்டாஞ்சாவடி பகுதி பாஜக பிரமுகர் சீனிவாசன் பிறந்தநாளை அவரது ஆதரவாளர்கள் மற்றும் பாஜகவினர் வெகு விமர்சையாக கொண்டாடினர். உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சீனிவாசனை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, தட்டாஞ்சாவடி பகுதியில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில், சீனிவாசன் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு கேக் வெட்டி, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தட்டாஞ்சாவடி குளத்து மேட்டு தெருவில் அமைந்துள்ள அறிவொளி விநாயகர் ஆலயத்திற்கு 20, ஆயிரம் திருப்புணிக்காக நன்கொடை வழங்கினார். விழாவில் பாஜக மாநில செயலாளர் மோகன் குமார், வில்லியனூர் தொகுதி தலைவர் ரவிச்சந்திரன், துணைத்தலைவர் தட்சிணாமூர்த்தி, வில்லினூர் தொகுதி பொறுப்பாளர் கண்ணபிரான், முகமது யூனஸ் உட்பட மாநில மற்றும் தொகுதி பாஜக நிர்வாகிகள், பல்வே...

VASCCO PEOPLE'S CHOICE AWARDS - 2022

வாஸ்கோ நிறுவனத்தின் 2ஆம் ஆண்டு விருது வழங்கும் விழா நவம்பர் மாதம் புதுச்சேரியில் நடைபெற உள்ளதாக நிறுவனத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர் புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த வாஸ்கோ நிறுவனத்தின் இயக்குநர் ஆனந்த், புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் கடந்த 15 ஆண்டுகளாக வாஸ்கோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது என்றும், சுற்றுலா பயணிகளுக்கு மாத இதழ், டிஜிட்டல் சேவைகள் மற்றும் சுற்றுலா இடங்களின் வரைபடங்களை இலவசமாக வழங்கி வருவதாக தெரிவித்தார். மேலும், பல்வேறு துறைகளில் உள்ள நிபுணர்களை கொண்ட குழு மூலம், திறமையானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு வாஸ்கோ நிறுவனம் விருது வழங்கி கௌரவித்து வருகிறது என்றும், வாஸ்கோ நிறுவனத்தின் 2 ஆம் ஆண்டு பீப்பிள் சாய்ஸ் அவார்ட் விருது வழங்கும் விழா நவம்பர் மாதம் புதுச்சேரியில் நடைபெற உள்ளதாக கூறினார்.  உணவகங்கள், ரெஸ்டோ பப்கள், சுற்றுலா, பேஷன் புகைப்படம், நீர் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 30 பேரை தேர்ந்தெடுத்து விருது வழங்க உள்ளதாக தெரிவித்த அவர்,புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படு...

முத்தியால்பேட்டை தொகுதியில் அதிமுக 51வது ஆண்டு விழா கொண்டாட்டம்..

அதிமுக 51வது ஆண்டு தொடக்க விழா முத்தியால்பேட்டை தொகுதியில், கிழக்கு மாநில துணை செயலாளரும்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வையாபுரி மணிகண்டன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொன்விழா நிறைவும், 51 – ஆவது ஆண்டு தொடக்க விழா  முத்தியால்பேட்டை தொகுதி அதிமுக சார்பில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. முத்தியால்பேட்டை காந்தி வீதியில் உள்ள திருக்குறள் மணிக்கூண்டு அருகே, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின்  அலங்கரிக்கப்பட்ட உருவப்படத்துக்கு மாநில துணை செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வையாபுரி மணிகண்டன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது, தொடர்ந்து ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தொகுதி நிர்வாகிகள் உட்பட தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.

பாண்லே தொழிற்சங்கத்தினருக்கு கொலை மிரட்டல்..!இயக்குனரை மாற்ற கோரி நாம் தமிழர் கட்சியினர் கவர்னர், முதல்வரிடம் புகார்..!

புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளர் ரமேஷ், துணை நிலை ஆளுநர், முதலமைச்சரிடம் அளித்துள்ள புகார் மனுவில், புதுச்சேரி பாண்லே நிறுவனத்திற்கு சொந்தமான பார்லார்களுக்கு (பூத்)ஒரு நாளைக்கு 17 ஆயிரம் லிட்டர் பால் அனுப்ப வேண்டிய சூழலில் ஏழாயிரம் லிட்டர் பால் மட்டுமே பாண்லே நிர்வாகத்தால்  வழங்கப்பட்டு வருகிறது  புதுச்சேரி முழுவதும் பாண்லே நிறுவனத்தின் பாலினை விற்பனை செய்யும் சுயத்தொழிலில் படித்த இளைஞர்கள் ஏழை எளிய 250க்கு மேற்பட்ட குடும்பங்கள் தங்களை பாண்லே நிறுவனத்தின் முகவர்களாக இணைத்துக்கொண்டு  பாண்லே நிறுவனத்தின் பாலினை நாள் தோறும் 80ஆயிரம் லிட்டர்   பால் விற்பனையில் முதன்மையானவர்களாக பணிபுரிந்து வரும் முகவர்களுக்கும் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக பாண்லே நிறுவனத்தின் பால் குறைத்து வழங்கப்படுகிறது  புதுச்சேரி அரசு பாண்லே நிறுவனத்தின் சொந்தமான பார்லார்களுக்கு (பூத்) அருகில் எந்தவித வித சட்டரீதியான நடவடிக்கையின் பின்பற்றாமல் ஆட்சியாளர்களின் ஆதரவாளர்களுக்கு பால் பார்லார்களை (பூத்) நடத்துவதற்கு அனுமதி வழங்குவதும் ...

மருத்துவ கல்லூரி உரிமையாளர்களுக்கு சாதகமாக செயல்படும் கட்டண நிர்ணயக்குழு..! தலைவரை மாற்ற அதிமுக போர்க்கொடி...!

புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் அவர்கள் இன்று தலைமை கழகத்தில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது : நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 500-க்கும் மேற்பட்ட பல பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த திமுக அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களுக்கு சொத்துவரி, வீட்டு வரி, குடிதண்ணீர் வரி, மின் வரி என மக்கள் மீது பல வரிதிணிப்பை விதித்து மக்களை துயரத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்நிலையில் ஆட்சியின் இயலாமையை மூடிமறைக்கவும், மக்களை திசை திருப்பும் வகையில் கடந்த 6 மாதகாலமாக ஜாதி மற்றும், மதத்தை கையில் எடுத்து மக்களை திசை திருப்ப திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுகவிற்கு உறுதுணையாக இருக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரின் செயல்களை மக்கள் புறக்கணித்துள்ளனர். இந்நிலையில் மீண்டும் மக்களை ஏமாற்ற நீர்த்துப்போன இந்தி திணிப்பு என்ற கோஷத்தை முன்வைத்து இந்தி எதிர்ப்பு என்ற போராட்டத்தை நடத்தியிருப்பது நாடகத்தனமான செயல் ஆகும். மத்தியில் திமுக கூட்டணியோடு காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது நாடுமு...

முத்தியால்பேட்டை தொகுதியில் ரூபாய் 98 லட்சம் செலவில் யூ வடிவ வாய்க்கால் அமைக்கும் பணி துவக்கம்

* முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட இரண்டு இடங்களில் சுமார் ரூபாய் 98 லட்சம் செலவில் யூ வடிவ வாய்க்கால் அமைக்கும் பணியினை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் குமார் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்* முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட திருவள்ளுவர் நகர் மற்றும் சோலை நகர் வடக்கு பகுதியில் யூ வடிவ வாய்க்கால் அமைத்து பல ஆண்டுகளாக புதிப்பிக்கப்படாமல் இருந்ததால், கழிவுநீர் வெளியே செல்லாமல் அடைப்பு ஏற்பட்டு மழைக்காலங்களில் மழை நீர் தேங்கி ஊருக்கு போகும் நிலை இருந்ததால் அப்பகுதி மக்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினரை சந்தித்து புதிய வடிகால் வாய்க்கால் அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து உடனடியாக அதிகாரிகளை தொடர்பு கொண்ட சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் குமார், விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து புதுச்சேரி பொலிவுரு நகர திட்ட நிதியிலிருந்து சுமார் ரூபாய் 98 லட்சம் செலவில் இரண்டு இடங்களிலும் புதிய யூ வடிவ வாய்க்கால் அமைப்பதற்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் குமார் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணிய...

ராகுல் பேரவை சார்பில் தினேஷ் குண்டுராவ் எம்எல்ஏ பிறந்தநாள் விழா

* ராகுல் காந்தி தேசிய பேரவை சார்பில் புதுச்சேரி மாநில மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் எம்எல்ஏ பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது* புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு மற்றும் ராகுல் காந்தி தேசிய பேரவை சார்பாக புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் மாநில மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் எம்எல்ஏ பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவின் ஒரு பகுதியாக, பேரவை தலைவர் R.E சேகர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் திருவேங்கடம் தலைமையில், மணக்குள விநாயகர் ஆலயத்தில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து,கௌசிக பாலசுப்பிரமணிய ஆலயத்தில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வண்ண அருவி ஓவிய கலைக்கூடத்தில் மாணவர்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.   இந்நிகழ்ச்சியில் மாநில இளைஞர் காங்கிரஸ் செயலாளர் RM. பிரபு, அசிஸ்ட் வேர்ல்டு ரெக்கார்டு நிறுவனர் ராஜேந்திரன், வண்ண அருவி ஓவிய கலைக்கூடத்தின் நிறுவனர் ராஜேஷ் ஓவிய ஆசிரியர் சக்திதாசன், ஓவியர்கள் அன்வர், முஸ்தபா மற்றும் பள்ளி மாணவ மாணவிகள...

கடந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் பெறப்பட்ட கட்டணத்தையே இவ்வாண்டும் பெற வேண்டும் என அரசு அறிவிக்க வேண்டுமென அதிமுக வலியுறுத்தல்!

புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற கட்சித் தலைவருமான அன்பழகன் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : புதுச்சேரி மாநிலத்தில் தங்களது பிள்ளைகள் தரமான கல்வி கற்க வேண்டும் என்ற பெற்றோர்களின் நியாயமான எண்ணத்தை பல தனியார் பள்ளிகள் பணமாக மாற்றம் செய்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தைப் பொருத்தமட்டில் நீண்ட நெடுநலாக தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்யவில்லை. ஒவ்வொரு தனியார் பள்ளிகளும் மனம்போன போக்கில் அதிகப்படியான கல்வி கட்டடத்தை வசூல் செய்து வந்தன. தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்ய வேண்டுமென அதிமுக தொடர்ந்து வலியுறுத்தியதின் அடிப்படையில் கடந்த திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு கல்வி கட்டணத்தை நிர்ணம் செய்தனர். அவ்வாறு நிர்ணம் செய்யும் போது ஒட்டுமொத்த தனியார் பள்ளிகளுக்கும் அந்தந்த படிப்புகளுக்கு தகுந்தார்போல் சீராண கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்யாமல் தனியார் பள்ளிகளின் விருப்பத்திற்கு ஏற்றார்போல் நிர்ணயம் செய்தனர். உதாரணத்திற்கு ஒரு சில தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே....

பாஜக நிர்வாகி மார்ட்டின் சார்லஸ் பிறந்தநாள் விழா

உருளையன்பேட்டை தொகுதி பாஜக துணை தலைவர் மார்ட்டின் சார்லஸ் பிறந்தநாளையொட்டி புதிய பேருந்து நிலையம் அருகே ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது se புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி பாஜக துணை தலைவர் மார்ட்டின் சார்லஸ் பிறந்தநாளை தொகுதி பாஜகவினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொகுதி முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டனர். விழாவின் ஒரு பகுதியாக, புதிய பேருந்து நிலையம் அருகே ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக மார்ட்டின் சார்ல்ஸ் மற்றும் சமூக சேவகர் மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டு 100கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயபிரகாஷ், அஷ்ரப் தீன், வெங்கடேசன், பிரகாஷ், ஜோசப், உட்பட தொகுதி பாஜக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

மாநிலம் ஸதம்பிக்கும் அளவில் போராட்டத்தை கையில் எடுப்போம்! செந்தில் கவுண்டர் ஆதரவாளர்கள் எச்சரிக்கை!

வன்னியர் பாதுகாப்பு பேரியக்கத்தின் நிறுவனத் தலைவர் செந்தில் அவர்களை அவதூறாக பேசி வரும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி, முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் சட்டப்பேரவை தலைவர் செல்வம் ஆகியோரை நேரில் சந்தித்து இயக்க நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர் புதுச்சேரி சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டத்தில், பாஜக சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம், வன்னியர் பாதுகாப்பு பேரியக்கத்தின் நிறுவன தலைவர் செந்தில் அவர்களை பற்றி அவதூறாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கல்யாணசுந்தரம் எம்எல்ஏ பேச்சை கண்டித்து பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வந்த நிலையில் புதுச்சேரி வன்னியர் பாதுகாப்பு பேரியக்கத்தின் நிர்வாகிகள், முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் சட்டப்பேரவை தலைவர் செல்வம் ஆகியோரை சந்தித்து, வன்னியர் பாதுகாப்பு பேரியக்கத்தின் நிறுவனத் தலைவர் செந்தில் அவர்களை அவதூறாக பேசிய பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரம் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாள...