*முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட இரண்டு இடங்களில் சுமார் ரூபாய் 98 லட்சம் செலவில் யூ வடிவ வாய்க்கால் அமைக்கும் பணியினை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் குமார் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்*
முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட திருவள்ளுவர் நகர் மற்றும் சோலை நகர் வடக்கு பகுதியில் யூ வடிவ வாய்க்கால் அமைத்து பல ஆண்டுகளாக புதிப்பிக்கப்படாமல் இருந்ததால், கழிவுநீர் வெளியே செல்லாமல் அடைப்பு ஏற்பட்டு மழைக்காலங்களில் மழை நீர் தேங்கி ஊருக்கு போகும் நிலை இருந்ததால் அப்பகுதி மக்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினரை சந்தித்து புதிய வடிகால் வாய்க்கால் அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதனை அடுத்து உடனடியாக அதிகாரிகளை தொடர்பு கொண்ட சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் குமார், விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து புதுச்சேரி பொலிவுரு நகர திட்ட நிதியிலிருந்து சுமார் ரூபாய் 98 லட்சம் செலவில் இரண்டு இடங்களிலும் புதிய யூ வடிவ வாய்க்கால் அமைப்பதற்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது.
இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் குமார் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார். மேலும் மழைக்காலம் வருவதற்குள் பணியை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்நிகழ்ச்சியில் துறை அதிகாரிகள், தொகுதி நிர்வாகிகள் உட்பட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக