முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கட்சி ஆண்டு விழாவில் தொண்டர்களுக்கு ஷாக் கொடுத்த ரங்கசாமி.!

* புதுச்சேரி தொகுதியில் கூட்டணிக் கட்சி வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளது பாஜக போட்டியிடுவதை உறுதி செய்துள்ளது* புதுச்சேரி மாநில என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் 14ம் ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்பட்டது.கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நிறுவன தலைவரும், மாநில முதலமைச்சருமான ரங்கசாமி கட்சி கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் பேசிய முதல்வர் ரங்கசாமி, நமது ஆட்சியில் சொன்னதை செய்துள்ளோம்; அதை மக்கள் முன் கொண்டு செல்ல வேண்டும். புதுச்சேரி அரசானது அறிவித்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. மேலும் மக்களுக்கான அனைத்து திட்டங்களையும் ஒன்றிய அரசின் நிதி பெற்று மாநில மக்களுக்கான வளர்ச்சிகளை தொடர்ந்து செய்து வருவதாக தெரிவித்தார்.  புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.எதிர்க்கட்சியினர் ஏதாவது ஒரு குறை கூற வேண்டும் என்பதற்காக தொடர்ச்சியாக பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவிப்பதாக தெரிவித்த முதலமைச்சர் ர...

தேர்தல் பணியை தொடங்கிய நகர மாவட்ட தலைவர் கிருஷ்ணராஜ்.!

புதுச்சேரி பாஜக நகர மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நகர மாவட்ட தலைவர் கிருஷ்ணராஜ் தலைமையில் நடைபெற்றது. புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் நகர மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் தொகுதி தலைவர்கள் கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. நகர மாவட்ட தலைவர் கிருஷ்ணராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்,சிறப்பு அழைப்பாளராக மாநிலபொதுச் செயலாளர் மோகன்குமார் கலந்துகொண்டு கலந்துரையாடினார். கூட்டத்தில்,பிரதமர் நரேந்திர மோடியின் மக்கள் நலத்திட்டங்களை மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும்,மக்களவை தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும், மக்களவைத் தேர்தல் பணியில் கருத்து வேறுபாடு இன்றி நிர்வாகிகள் தொண்டர்கள் செயல்பட வேண்டும் உட்பட பல்வேறு கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில், நகர மாவட்ட பொறுப்பாளர் செல்வகணபதி, நகர மாவட்ட பொது செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள்,தொகுதி தலைவர்கள்  ஆகியோர் கலந்து கொண்டனர்.