புதுச்சேரி பாஜக நகர மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நகர மாவட்ட தலைவர் கிருஷ்ணராஜ் தலைமையில் நடைபெற்றது.
புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் நகர மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் தொகுதி தலைவர்கள் கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.
நகர மாவட்ட தலைவர் கிருஷ்ணராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்,சிறப்பு அழைப்பாளராக மாநிலபொதுச் செயலாளர் மோகன்குமார்
கூட்டத்தில்,பிரதமர் நரேந்திர மோடியின் மக்கள் நலத்திட்டங்களை மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும்,மக்களவை தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும், மக்களவைத் தேர்தல் பணியில் கருத்து வேறுபாடு இன்றி நிர்வாகிகள் தொண்டர்கள் செயல்பட வேண்டும் உட்பட பல்வேறு கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், நகர மாவட்ட பொறுப்பாளர் செல்வகணபதி, நகர மாவட்ட பொது செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள்,தொகுதி தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக