முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திருக்கோயில்களில் நடைபெறும் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுக்க நேரு எம்எல்ஏ வலியுறுத்தல்.!

புதுச்சேரி 15-வது சட்டப்பேரவை நான்காவது கூட்டத்தொடரில் இன்று (28/03/2023) பூஜ்ஜியம் நேரத்தில் பேசிய உருளையன்பேட்டை தொகுதி சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு,  இந்து அறநிலையத்துறையானது திருக்கோயில்களில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளை பற்றி வரும் புகார்களை கண்டுகொள்வதில்லை. ஏனென்றால் இந்த துறையின் உள்ளவர்களே ஊழல் செய்பவர்களாக இருக்கிறார்கள்.   மகாத்மா காந்தி வீதியில் உள்ள ஈஸ்வரன் கோயில் கும்பாபிஷேகத்திற்கு செய்த செலவுகளில் முறைகேடு மற்றும் பெரியளவில் ஊழல் நடந்துள்ளது. இது பற்றி புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லாமல் உள்ளது. அதே போல கோயிலுக்கு சொந்தமான 1. பெல்காம் வீதி, 2. தியாகுமுதலியார் வீதி, 3.பெருமாள்கோயில் வீதி ஆகிய மூன்று இடங்களில் இருந்த பழைய கட்டிடங்களை இடித்து அகற்றிய போது அதிலிருந்த மர வாசகால்கள் மர திராய்கள் மற்றும் அதிலிருந்து கிடைத்த இரும்பு தளவாடங்கள் யாவும் கோயில் கணக்கில் வரவு வைக்கவில்லை.    அதே போல வேதபுரீஸ்வரர் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான கதவு எண்:58 காமாட்சியம்மன் கோயில் தெருவில் உள்ள ஒரு சொத்தை தனிநபர் ஆக்கி...

வையாபுரி மணிகண்டன் தலைமையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.!

*அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தல் செல்லும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று புதுச்சேரி மாநில துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்* அதிமுக பொது குழு தீர்மானம் செல்லும் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இதனை வரவேற்று தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். இதனிடையே, புதுச்சேரியில், மாநில துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் தலைமையில், உயர் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று  முத்தியால்பேட்டை திருக்குறள் மணிக்கூண்டு அருகே 100 கும் மேற்பட்ட அதிமுகவினர் பட்டாசு வெடித்தும்,பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் அதிமுக கழக நிர்வாகிகள் பழனிசாமி, கஜேந்திரன், விக்னேஷ் காசிநாதன்,  வில்லியனூர் மணி,  கோபால், செல்வம், பரமசிவம், நாராயணசாமி, மோகன், செல்வம், விஸ்வநாதன், அந்துவான்,  ம...

100 நாள் வேலை திட்டத்தை முழுமையாக செயல்படுத்த திமுக கோரிக்கை.!

சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள் பேசியதாவது: – கவனஈர்ப்புத் தீர்மானம் 2005–ஆம் ஆண்டு ஒன்றியத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தில் பணியாளர்களுக்கான ஊதியம் ஒன்றிய அரசு 75 சதவீதம் எனவும், மாநில அரசு 25 சதவீத அளவில் வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஒவ்வொரு ஊரகத்திலும் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் 100 நாட்கள் வேலை வாய்ப்பு தரப்படும் என்று உறுதியளிக்கப்பட்டு, நாடு முழுவதும் சுமார் 10 கோடிக்கு மேல் பணியாளர்கள் இத்திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர்.  இத்திட்டத்தின் பணியாளருக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 283 ஊதியமாக வழங்கப்படுகிறது. தற்போது ஏப்ரல் முதல் ரூ. 294 என்று உயர்த்தப்பட்டுள்ளது. அரசியல் சட்டம் அளித்துள்ள உணவு உரிமையின் ஒரு அங்கமாக, பட்டினிச்சாவு நிகழா வண்ணம் இத்திட்டம் நிற்கிறது. விவசாய பணிகள் இல்லாத காலங்களில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு இத்திட்டம் அவர்கள் வாழ்வில் ஔியேற்றும் திட்டமாக இருந்து வருகிறது. ஆனால்...

புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு.! திமுக குற்றச்சாட்டு.!

புதுச்சேரி பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்டதற்கு வில்லியனூர் காவல் நிலைய ஆய்வாளரே முதற்காரணம் என எதிர்க்கட்சி தலைவர் சிவா பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பூஜ்ய நேரத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சிவா, புதுச்சேரியில் ஆளுகின்ற என்.ஆர் காங்கிரஸ் -பாஜக கூட்டணி ஆட்சியில், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என்றும், காவல்துறையில் உள்ள சில கருப்பு ஆடுகள் குற்றவாளிகளுடன் தொடர்பு வைத்துக்கொண்டு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் சிவா, புதுச்சேரி மாநிலம் முழுவதும் கஞ்சா விற்பனை தங்கு தடையின்றி நடைபெறுவதாகவும், சில ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களே இந்த தொழிலை செய்வதாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார். ஆளுங்கட்சி பிரமுகர் வெடிகுண்டு வீசி, கத்தியால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும், பாஜக பிரமுக...

பாஜக பிரமுகர் செந்தில் கொலை வழக்கில், நீதிமன்றத்தில் 7 பேர் சரண்

பாஜக பிரமுகர் செந்தில் கொலை வழக்கில் திருச்சி நீதிமன்றத்தில் 7 பேர் சரணடைந்தனர். புதுச்சேரி வில்லியனூர் பாஜக பிரமுகர் செந்தில் நேற்று இரவு ஏழு பேர் கொண்ட மர்ம கும்பலால் வெடிகுண்டு வீசியும், கத்தியால் வெட்டப்பட்டும் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து,4 தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், குற்றவாளிகள் திருச்சி நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தனர். நீதிமன்றத்தில் சரணடைந்தவர்களின் விவரம்; புதுச்சேரி திருக்காஞ்சி பகுதியைச் சேர்ந்த நித்தியானந்தம் (வயது 43), புதுச்சேரி கொம்பாக்கம் சிவசங்கர் (வயது 23), புதுச்சேரி கோர்கார்ட் பகுதியைச் சேர்ந்த ராஜா (வயது 23), புதுச்சேரி தனத்து மேடு வெங்கடேஷ் (வயது 25),கடலூர் கிளிஞ்சிகுப்பத்தைச் சேர்ந்த பிரதாப் (வயது 24), புதுச்சேரி கோர்கார்டு பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் ( வயது 23), புதுச்சேரி அரியாங்குப்பத்தைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 26) ஆகிய 7 பேர்.

பொறுப்பில்லாத சட்டமன்ற உறுப்பினர்கள்.! அதிமுக விமர்சனம்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் அவர்கள் இன்று (25-03-2023) தலைமை கழகத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது: புதுச்சேரியில் நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடர் நிறைவடைய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் மாநில வருவாய் சம்பந்தமாகவும், சமூக சமுதாய பிரச்சனைகள் சம்பந்தமாகவும், மாணவ மாணவிகளின் நலன் சம்பந்தமாகவும் அரசின் கவனத்திற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்டுவராதது பொறுப்பற்ற செயலாகும். உதாரணத்திற்கு தனியார் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் 50 சதவீத இடஒதுக்கீட்டினை உறுதி செய்ய உரிய சட்டம் கொண்டுவரப்படவில்லை. அரசு பள்ளியில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களுக்காக தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் மாண்புமிகு எடப்பாடியர் கொண்டுவந்த அரசு உள்ஒதுக்கீட்டில் 7.5 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் சார்ந்த படிப்பில் உள்ஒதுக்கீடு வழங்கியது போல் புதுச்சேரி அரசின் கவனத்திற்கு யாரும் கொண்டுவரவில்லை. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் சட்டத்திற்கு புறம்பான...

ஜிப்மரில் உயர் சிகைச்சைக்கு கட்டணம்.! திமுக கண்டனம்.!

புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பூஜ்ய நேரத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்எல்ஏ, புதுச்சேரி ஜிப்மரில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மேம்பட்ட உயர் மதிப்பு விசாரணைகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் வராத மற்றும் ஏழைகளுக்கான சிவப்பு ரேஷன் கார்டு இல்லாத நோயாளிகளிடமிருந்து பயன்பாட்டு கட்டணங்கள் ஏப்ரல் 1 முதல் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கபட்டுள்ளது. இது தொடர்பாக, ஜிப்மர் மருத்துவ கண்காணிப்பாளர் அனைத்து துறை தலைவர்களுக்கு அனுப்பிய உத்தரவில், ஜிப்மரில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மேம்பட்ட உயர் மதிப்பு விசாரணைகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் வராத மற்றும் ஏழைகளுக்கான சிவப்பு ரேஷன் கார்டு இல்லாத நோயாளிகளிடமிருந்து பயன்பாட்டு கட்டணங்கள் ஏப்ரல் 1 முதல் வசூலிக்கப்படும். அத்தொகை நிறுவன வருவாய் கணக்கில் துறைகள் வரவு வைக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.  மேலும், நோயாளியின் பராமரிப்பின் நலனுக்காக, மேம்பட்ட சோதனையை வலுப்படுத...

ஆணவ முதலமைச்சர்.! அதிமுக கண்டனம்.!

புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla., திரு.வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தின் கலாச்சாரம் ரெஸ்டோ பார்கள் எனப்படும் கவர்ச்சி நடன பார்களால் சீரழிந்து வருகிறது. அரைகுறை ஆடைகள் அணிந்து கொண்டு வெளிமாநில இளைஞர்களும், இளம்பெண்களும் மதுக்கடைகளில் வரிசையில் நிற்பது வாடிக்கையாகி விட்டது. மது அருந்திவிட்டு நகர வீதிகளில் ஆட்டம் போடுவது, புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த இளைய சமுதாயத்தை தவறான பாதைக்கு வழிநடத்துகிறது. *மது அருந்துவதுதான் நவீன கலாச்சாரம், நாகரீகம் என்ற ரீதியில் செல்வது புதுச்சேரி மாநில எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை சீரழிக்கும்.* இதைப்பற்றி துளியும் அக்கறையில்லாத முதலமைச்சர், ரெஸ்டோ பார்கள் இன்னும் வரும் என சர்வாதிகார ஆணவத்தோடு சட்டசபையில் தெரிவித்துள்ளதை அதிமுக சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்கள் எண்ணங்களுக்கு விரோதமாக அறிவிப்புகளை வெளியிடும் முதலமைச்சரை தட்டிக்கேட்காமல், சட்டமன்றத்தில் இருக்கக்கூடிய அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் வாய்மூடி மவுனம் காப்பது ஏன்? என்ற சந்தேகம் எழுகிறது....

கைது செய்யப்பட்டுள்ள ரேஷன் கடை ஊழியர்களை விடுவிக்க வேண்டும்.! ஏஐடியுசி வலியுறுத்தல்.!

புதுச்சேரி மாநில ஏஐடியூசி பொதுச் செயலாளர் சேது செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  புதுச்சேரி நியாய விலை கடை கூட்டுறவு நிறுவனத்தின் மூலம் 336 நியாய விலை இருந்து வருகிறது. இந்த கடைகளில் 580 மேற்பட்டவர்கள் வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த 55 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இங்கு பணிபுரிக்கூடிய ஊழியர்கள் அறவழியில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தார்கள். அரசோடும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அரசோடு நடத்திய பேச்சு வார்த்தையில் நியாய விலை கடைகளை திறந்து சம்பளம் வழங்கப்படும் எனவும், நிலுவை சம்பளம் கொடுக்கப்படும் எனவும் வாக்குறுதி அளிக்கப்பட்டு நிறைவேற்றாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.  இதனை வலியுறுத்தி இன்றைய தினம், முதலமைச்சரை சந்தித்து முறையிடுவதற்கு ஊழியர்கள் அனைவரும் முதலமைச்சர் இல்லத்திற்கு சென்று, முதலமைச்சரை சந்தித்து நியாய விலை கடைகளை திறக்க வேண்டும், நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இதனிடையே இங்கு வந்த காவல் துறையினர், ஊழியர்களை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். ...

முதல்வரை விமர்சிக்க நாராயணசாமிக்கு தகுதி இல்லை.! அன்பழகன் ஆவேசம்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் அவர்கள் இன்று உப்பளம் தலைமைக் கழகத்தில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :  கடந்த திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஐந்தாண்டு காலம் முதலமைச்சராக இருந்த நாராயணசாமி அவர்கள் ஒருமுறை கூட முழுமையான பட்ஜெட் போடாமல் அறிவித்த எந்த திட்டத்தையும் செயல்படுத்தாமல் தனது காலத்தை கடந்து சென்றார்.  நாராயணசாமி தலைமையிலான அரசு என்பது புதுச்சேரி மாநிலத்தின் ஒரு இருண்ட ஆட்சியாகும், 5 ஆண்டு காலத்தில் நூறு ரூபாய் அளவில் கூட எந்த ஒரு திட்டத்திலும் மக்கள் பயன்பெறவில்லை. தேர்தலில் போட்டியிடாமல் பதுங்கிக் கொண்டவர் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி.  அப்படிப்பட்ட நபர் சட்டமன்றத்தில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்திக் கொண்டு இந்த பட்ஜெட்டில் வரலாற்று சிறப்புமிக்க பல்வேறு திட்டங்களை அறிவித்த எங்கள் கூட்டணியின் முதலமைச்சரை பற்றி தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வதும் பொய்யான பல கருத்துக்களை எடுத்துக் கூறுவதும் தகுதியற்ற செயலாகும்.   மொத்த பட்ஜெட்டில் 11,600 கோடி...

முதல்வர் இல்லத்தை முற்றுகையிட்ட ரேஷன் கடை ஊழியர்கள்.!

ரேஷன் கடைகளை திறக்க வலியுறுத்தி முதல்வர் ரங்கசாமி வீட்டை ரேஷன் கடை ஊழியர்கள் 100கும் மேற்பட்டோர் குடும்பத்தினருடன் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரியில் ரேஷன் கடைகளை திறக்க வேண்டும், நிலுவையில் உள்ள 53 மாத சம்பளத்தை வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் கடந்த 5 வருடங்களாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட ரேஷன் கடை ஊழியர்கள் தங்களது குடும்பத்தினருடன், ரேஷன் கடைகளை திறக்க வலியுறுத்தி, கோரிமேட்டில் உள்ள முதல்வர் இல்லத்திற்கு வந்தனர்.முதல்வர் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருந்ததால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஊழியர்கள் முதல்வர் வீட்டின் முன்பு காத்திருந்தனர். விளையாடிவிட்டு வந்த முதல்வர் ரங்கசாமியிடம், மீண்டும் ரேஷன் கடைகளை திறக்க வேண்டும் என்றும், 53 மாத சம்பளத்தை வழங்க வேண்டும் என்றும் ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். அனைவரும் ஒரு சேர கூச்சலிட்டதால், கோபமடைந்த முதல்வர் ரங்கசாமி, 53 மாதங்களாக எங்கே சென்றீர்கள் என்றும், யார் தூண்டுதலின் பேரில் இங்கே வந்தீர்கள் என்றும்...

ராகுல் பேரவை சார்பில் சர்வதேச மகளிர் தின விழா.!

ராகுல் காந்தி தேசிய பேரவை சார்பில், மகளிர் தினத்தை முன்னிட்டு, ராகுல் பாதயாத்திரையில் பங்கேற்ற புதுச்சேரி சேவாதள தலைவியும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினருமான பெரிய நாயகிக்கு சான்றிதழ் மற்றும் கேடயத்தை சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் பரம்பத் வழங்கி பாராட்டினார். ராகுல் காந்தி தேசிய பேரவை சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. ராகுல் காந்தி தேசிய பேரவை தலைவரும், காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு சேர்மனமான ஆர்.இ சேகர் தலைமையில், பொதுக்குழு உறுப்பினர் திருவேங்கடம் முன்னிலையில் நடைபெற்ற விழாவில், சிறப்பு விருந்தினராக மாகே சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் பரம்பத் கலந்து கொண்டு சிறப்பித்தார். ராகுல் காந்தியின் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைப்பெற்ற பாதயாத்திரையில், புதுச்சேரியில் இருந்து ஒரே நபராக பங்கேற்ற, சேவாதள மகளிர் அணி தலைவியும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினருமான பெரியநாயகிக்கு, சான்றிதழ் மற்றும் கேடயத்தை சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் பரம்பத் வழங்கி கௌரவித்தார்.தொடர்ந்து, சேவாதளி மகளிர் அணி நிர்வாகிகளுக்கு சேவாதள சீருடையை ஆர்.இ சேகர், திருவேங்...

எடப்பாடி உயிருக்கு,ஸ்டாலினால் ஆபத்து.! புதுச்சேரி அதிமுக குற்றச்சாட்டு.!

தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் 100 கும் மேற்பட்ட அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்த தமிழக திமுக அரசை கண்டித்தும் ,உடனடியாக அந்த வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தியும் புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில்,அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டு தமிழக திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். அதன் பின்னர் செய்தியாளரிடம் பேசிய அன்பழகன், எடப்பாடி என்பவர் சாதாரண ஆள் இல்லை என்றும், 1.5 கோடி தொண்டர்களுக்கு தலைவராக இருக்கக்கூடியவர். அது மட்டும் இல்லாமல் ஒரு எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சரான அவருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய தமிழக அரசே, அவர் மீது திட்டமிட்டு பொய் வழக்கை போட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என்றும் ,முதலமைச்சர் ஸ்டாலினால் எடப்...

பட்ஜெட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.!

புதுச்சேரி பட்ஜெட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. 2023-24ம் ஆண்டுக்கு, 11 ஆயிரத்து 600 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்ய புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது.இதற்கு மத்திய அரசின் ஒப்புதலை பெறுவதற்கு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கோப்புக்கு மத்திய உள்துறை ஒப்புதல் அளித்து, நிதி அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நிதி அமைச்சகமும் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், பட்ஜெட் தாக்கலுக்கு ஏற்பட்டு இருந்த சிக்கல் நீங்கியது. வரும் 13ம் தேதியன்று, முதல்வர் ரங்கசாமி, திட்டமிட்டப்படி பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இதையடுத்து, பட்ஜெட்டுக்கு இறுதி வடிவம் தரும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ள நிலையில், சட்டப்பேரவையில் உள்ள அரங்கில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், நமச்சிவாயம்,தேனி.ஜெயக்குமார்,சந்திர பிரியங்கா,சாய்.ஜெ.சரவணன் குமார்ஆகியோர் பங்கேற்றனர். மேலும் தலைமை செயலர் ராஜீவ் வர்மா,நிதி செயலர் ராஜீ மற்றும் அரசு செயலர்கள் பங்கேற...

இரட்டை வேடம் போடும் பாஜக.! அதிமுக குற்றச்சாட்டு.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் இன்று தலைமை கழகத்தில் (11-03-2023) செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது, புதுச்சேரி மாநிலத்திற்கு நியாயமான கோரிக்கையான மாநில அந்தஸ்து பிரச்சனையில் பாஜக இரட்டை வேடம் போடுவதாக தெரிகிறது. மாநில அந்தஸ்து தொடர்பாக கடந்த 3 மாதத்திற்கு முன்பு பாஜக தலைவர் ஒரு முரண்பாடான கருத்தை தெரிவித்துள்ளார். தற்போது நடந்து கொண்டிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைத்தால் காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்கள் புதுச்சேரியில இருந்து பிரிக்கப்படும் என்ற தவறான கருத்தை பாஜக சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த தவறான கருத்திற்கு திமுக, காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட எந்த அரசியல் கட்சியை சேர்ந்த சட்ட்டமன்ற உறுப்பினர்களும் அது தொடர்பாக சரியான விளக்கத்தை கூறவில்லை. யூனியன் பிதேசமான புதுச்சேரி மாநிலத்தை இன்று வரை டெல்லியில் இருந்து மத்திய உள்துறை அமைச்சகம் ஒருங்கிணைந்து ஆட்சி செய்ய கூடிய இந்த சூழ்நிலையில் 4 பிராந்தியங்களை உள்ளடக்கிய புதுச்சேரி ம...

மகளிர் தினத்தை முன்னிட்டு மெகா சைஸ் ஓவியம் வரைந்து அசத்திய பெண்.!

மகளிர் தினத்தை முன்னிட்டு, புதுச்சேரியில் கர்ப்பிணி பெண் 9 அடி நீளம் 7 அடி அகலத்தில் மதுபானி ஓவியம் வரைந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஓவியர் சோலை அபிராமி. இவர் ஓவியர் ஆசிரியராகவும் உள்ளார். தொடர்ந்து முக்கிய நிகழ்வுகளை பெரிய அளவில் ஓவியங்களாக தீட்டி வரும் இவர், மகளிர் தினத்தை முன்னிட்டு, தனது இல்லத்தில் 9 அடி நீளம் 7 அடி அகலத்தில் மதுபானி ஓவியம் வரைந்துள்ளார். இந்த ஓவியத்தில் பூமாதேவி கர்ப்பிணி பெண்ணை தாங்குவது போலவும், பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது போலவும் தீட்டப்பட்டுள்ளது. இதனை அப்பகுதியில் உள்ள மக்கள் பார்த்து ஓவியரை பாராட்டி வருகின்றனர். இது குறித்து பேசிய ஓவியர் சோலை அபிராமி, தொடர்ந்து பல ஆண்டுகளாக வித்யாசமான முறைகளில் ஓவியம் தீட்டி வருவதாகவும், மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வட மாநில கலாச்சார மதுபானி ஓவியம் வரைந்து உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இடைவெளி இல்லாமல் வரையப்பட்ட ஓவியத்தை இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட் சாதனைக்கு அனுப்ப உள்ளதாகவும் தெரிவித்தார...

பாஜகவால் புதுச்சேரி அரசுக்கு களங்கம்.! அதிமுக குற்றச்சாட்டு.!

புதுச்சேரியில் மாநில அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆணவத்தின் உச்சத்தில் அதிமுகவை குறைத்து பேசி வருகிறார். அண்ணாமலை அவர்களுக்கு அதிமுகவை பற்றியோ, நிரந்தர பொதுச்செயலாளர் மாண்புமிகு எடப்பாடியார் பற்றியோ பேச எந்த தகுதியும் கிடையாது.  பொதுவாக ஒரு கட்சியில் தொண்டராக இருந்து பல்வேறு பொறுப்புகளை ஏற்று ஒரு கட்சிக்கு தலைமை தாங்கி வரும்போது தான் கட்சியின் நிலைபாடுகள் பற்றி கூறி தெரியும். நேரடியாக அண்ணாமலை போன்றவர்கள் தலைமை பொறுப்புக்கு வந்ததால் ஆணவத்தின் உச்சியில் அரசியல் என்றால் எண்ணவென தெரியாத வகையில் உலரிக்கொண்டு இருக்கிறார். அதிமுகவில் இருந்து பல நிர்வாகிகள் பாஜகவில் சேரும் போது கூட நாங்கள் அமைதிதான் காத்தோம். அப்போது கூட்டணி, கட்சியின் பண்பு, மாண்புகள் பாஜகவுக்கு இருந்ததா? இல்லை. பாஜகவின் சர்வாதிகார தனத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் அந்த கட்சியினிடைய நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர். அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் எடப்பாடியார் உருவபடத்தை எரிப்பது என்பது அநாகரீகத்தின் உச்சகட்டம். அம்மா போல இருப்பேன...

முதல் முறையாக நேரலையில் புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர்.!

புதுச்சேரியில் முதல் முறையாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சமூக வலைதளங்கள் மற்றும் உள்ளூர் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் தயாளன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவை செயலாளர் தயாளன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதுச்சேரி 15வது சட்டப்பேரவையின் 4வது கூட்டத்தொடர் நாளை (09.03.2023) காலை 9.45 மணியளவில் துணைநிலை ஆளுநர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் உரையுடன் தொடங்குகிறது. துணைநிலை ஆளுநர் உரையினை சமூக ஊடகங்களான YouTube, Facebook மற்றும் Twitter போன்றவைகளின் வாயிலாக நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் கீழ்காணும் முகவரியில் (URL) காணலாம். 1.YouTube : https://www.youtube.com/watch?v=nVvsLD3zeVE 2. Facebook : https://www.facebook.com/events/732629861834579/ 3. Twitter : https://twitter.com/utofpuducherry 2. மேலும், புதுச்சேரி தூர்தர்ஷன் தொலைக்காட்சி, துணைநிலை ஆளுநர் உரையினை நேரடியாக ஒளிபரப்பு செய்ய உள்ளது. இதனை பொதுமக்கள் https://www.youtube.com/watch?v=236wP2u8Cwl என்னும் முகவரியில் காணலாம். 3. இது தவிர, இந்ந...

இந்த நிலை உங்களுக்கும் வரும்.! ரங்கசாமியை எச்சரிக்கும் மணிகண்டன்.!

புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla., வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் இல்லை. மக்கள் பிரதிநிதியாக நினைத்ததை செய்ய முடியாமல், மாநில அந்தஸ்து கிடைக்காமல், மன உளைச்சலில் உள்ளேன் என முதலமைச்சர் மேடைக்கு மேடை கபடநாடகம் ஆடி வருகிறார். முதலமைச்சர் முதலில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அவர்களுக்கான உரிமையை வழங்குவாரா ? ஏனாம் பிராந்தியத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சுயேச்சை சட்டமன்ற உறுப்பினராக கொல்லப்பள்ளி சீனிவாச அசோக் உள்ளார். அந்த பிராந்தியத்தில் போட்டியிட்டு முதலமைச்சர் தோல்வியை தழுவினார். மக்கள் தீர்ப்பை மகேசன் தீர்ப்பாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அவரிடத்தில் இல்லை. இதனால் முதலமைச்சர் சர்வாதிகார நோக்கோடு, முன்னாள் அமைச்சருக்கு டெல்லி சிறப்பு பிரதிநிதி என்ற பதவியை வழங்கினார். முதலமைச்சரால் வழங்கப்பட்ட பதவியை வைத்துக்கொண்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினருக்கு எல்லாவிதத்திலும் முன்னாள் அமைச்சர் தொல்லை கொடுத்து வருகிறார். டெல்லி சிறப்பு பிரதிநிதியாக புதுச்சேரி அரசு சா...