*அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தல் செல்லும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று புதுச்சேரி மாநில துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்*
அதிமுக பொது குழு தீர்மானம் செல்லும் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இதனை வரவேற்று தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
இதனிடையே, புதுச்சேரியில், மாநில துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் தலைமையில், உயர் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று முத்தியால்பேட்டை திருக்குறள் மணிக்கூண்டு அருகே 100 கும் மேற்பட்ட அதிமுகவினர் பட்டாசு வெடித்தும்,பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக கழக நிர்வாகிகள் பழனிசாமி, கஜேந்திரன், விக்னேஷ் காசிநாதன், வில்லியனூர் மணி, கோபால், செல்வம், பரமசிவம், நாராயணசாமி, மோகன், செல்வம், விஸ்வநாதன், அந்துவான், மண்ணாங்கட்டி, தனலட்சுமி, ராதா, ஹரிகிருஷ்ணன், முனியாண்டி, வாசு, நடராஜன், ஆறுமுகம், பஞ்சவர்ணம், பச்சையப்பன் , வினோத்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக