புதுச்சேரி நீதிமன்றத்தில் கொரானா விதிமுறைகளுக்கு உட்பட்டு நேரடி விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில்,புதுவை நீதிமன்றங்களில் உள்ள அனைத்து வழக்கு களையும் கொரோனா விதிமுறைக்கு உட்பட்டு நேரடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள ஐகோர்ட்டு அனுமதிக்க வேண்டும் என்றும், வாரிசு உரிமை வழக்குகளை உரிமையியல் நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நீதிமன்றம் வாயில் முன்பு நடைபெற்றது. வழக்கறிஞர் சங்க தலைவர் குமரன் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில்,சங்க நிர்வாகிகள் மற்றும் 100 கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே சங்க செயற்குழு உறுப் பினர் மணிகண்டன் விபத்தில் மரணமடைந்ததாக தகவல் வந்ததையடுத்து வழக்கறிஞர சங்கத்தினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
உண்மை செய்திகளை வழங்குவது, துல்லியம் தவறாமல் செய்தி அளிப்பது, துணிவோடு செய்திகளை வெளிப்படுத்துவது.