புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு லட்சக்கணக்கான மக்கள் திரண்ட போது எதிர்ப்பு தெரிவிக்காத திமுக, மலிவு அரசியல் விளம்பரத்திற்காக பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக,அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார்
புதுச்சேரி உப்பளம் அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த, கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன்,
கூட்டணி கட்சிகளின் நெருக்கடிக்கு பயந்து தமிழகத்தில் பிரதமர் வருகையை ரத்து செய்யும் விதமாக திடீர் என ஊரடங்கை திமுக அரசு அமுல்படுத்தியது கண்டிக்கத்தக்கது என்றும், புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டாத்திற்கு லட்சகணக்காண மக்கள் திரண்ட போது எதிர்ப்பு தெரிவிக்காத திமுக,மலிவு அரசியல் விளம்பரத்திற்காக பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக குற்றம் சாட்டினார்.
மேலும்,துணைநிலை ஆளுநர் அதிகாரத்தை நீதிமன்றம் வரை சென்று பெற்றுக்கொடுத்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, தற்போது அனைத்து அறிவிப்புகளையும் துணைநிலை ஆளுநர் வெளியிடுகிறார் என குறைகூறுவதற்கு தகுதியில்லை என தெரிவித்தார்.
கருத்துகள்
கருத்துரையிடுக