உங்களை அடையாளப்படுத்துவதும், உங்கள் எதிர்காலத்தை தீர்மானிப்பதும் கல்வி ஒன்றுதான் என புத்தாண்டை முன்னிட்டு,உழவர்கரை தொகுதியில் மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழாவில் சாய் இளங்கோவன் தெரிவித்தார்
புதுச்சேரி சாய் இளங்கோவன் அறக்கட்டளை சார்பில் உழவர்கரை தொகுதி ஜெ.ஜெ நகர் மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், எழுதுகோல் மற்றும் இனிப்புகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சாய் இளங்கோவன் அறக்கட்டளை நிறுவனர் சாய்.இளங்கோவன் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள்,எழுதுகோல் இனிப்பு மற்றும் பள்ளி உபகரணங்களை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகளிடையே பேசிய சாய்.இளங்கோவன்,
உங்களை அடையாளப்படுத்துவதும், உங்கள் எதிர்காலத்தை தீர்மானிப்பதும் கல்வி ஒன்றுதான் என்றும், எனவே மாணவ செல்வங்கள் கல்வி பயில்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், புதுச்சேரியை சேர்ந்த மாணவர்கள் ஐஏஎஸ் தேர்வில் கவனம் செலுத்தி வெற்றிபெற்று புதுச்சேரியில் பணியாற்ற வேண்டுமென எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் திருமுருகன், கல்வியாளர் சதிஷ் குமார், சசிகுமார்,கோவிந்தராஜன்,பாபு, சத்யன்,ஜெனோ உட்பட சாய் இளங்கோவன் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக