உழவர்கரை எல்லை மாரியம்மன் ஆலயத்தின் இரண்டாம் ஆண்டு கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜையில் சாய் இளங்கோவன் கலந்து கொண்டு தனது சொந்த செலவில் 500க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அறுசுவை உணவு வழங்கினார்
உழவர்கரை தொகுதிக்குட்பட்ட உழவர்கரை எல்லை மாரியம்மன் ஆலயத்தின் இரண்டாம் ஆண்டு கும்பாபிஷேக விழாவிற்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேக ஆராதனை விழா நடைபெற்றது.
உழவர்கரை தொகுதியில் தொடர்ந்து சமூகப்பணி, கல்விப்பணி, இறை பணி உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வரும் சாய் இளங்கோவன் அறக்கட்டளை நிறுவனர் சாய் இளங்கோவனுக்கு கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட 500-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு சாய் இளங்கோவன் தனது சொந்த செலவில் அறுசுவை உணவு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கோயில் அறங்காவல் நிர்வாகிகள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக