காலாப்பட்டு தொகுதிக்குட்பட்ட லட்சுமி நகரில் திடீர் தீ விபத்தால் சேதமான வீட்டின் குடும்பத்தாரை சந்தித்து தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் பாஜக பிரமுகர் அசோக்குமார் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறி, நிவாரணம் வழங்குவதாக உறுதியளித்தனர்
காலாப்பட்டு தொகுதி நாவர்குளம் வார்டுக்கு உட்பட்ட லட்சுமி நகரில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாயின.
இதனையடுத்து தகவலறிந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம், நாவர்குளம் வார்டு பாஜக பிரமுகர் அசோக்குமார் ஆகியோர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
மேலும் அரசு சார்பில் நிவாரணம் பெற்றுத் தருவதாகவும், சட்டமன்ற உறுப்பினர் சார்பில் நிவாரணம் வழங்குவதாகவும் கல்யாணசுந்தரம் எம்எல்ஏ உறுதியளித்தார்.
இந்த சந்திப்பின்போது நாவர்குளம் வார்டு பாஜக நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்
கருத்துகள்
கருத்துரையிடுக