திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு புதிய பேருந்து நிலையம் வளாகத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் , சட்டப்பேரவைத் தலைவர், அமைச்சர்கள் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்
புதுவை அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது. புதிய பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சாய் ஜெ.சரவணன்குமார், அரசு கொறடா ஆறுமுகம் உட்பட சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதேபோன்று திருவள்ளுவருக்கு திமுக, அதிமுக,திராவிட கழகம் பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதனை தொடர்ந்து, சாய் இளங்கோவன் அறக்கட்டளை நிறுவனர் சாய் .இளங்கோவன் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
கருத்துகள்
கருத்துரையிடுக