அன்பு பொங்க, ஆசைகள் பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க என்றும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்கட்டும் என உழவர்கரை தொகுதி மக்களுக்கு கரும்புகள் வழங்கி சாய்.இளங்கோவன் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்
பொங்கல் திருநாளை முன்னிட்டு உழவர்கரை தொகுதி முழுவதும் உள்ள குடும்பங்களுக்கு சாய் இளங்கோவன் அறக்கட்டளை சார்பில் கரும்புகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக 3-வது நாளாக இன்று, உழவர்கரை தொகுதிக்கு உட்பட்ட முத்துப்பிள்ளை பாளையம் பகுதியில் வசிக்கும் குடும்பங்களுக்கு அறக்கட்டளை நிறுவனர் சாய்.இளங்கோவன் வீடு-வீடாக சென்று கரும்புகள் வழங்கி,அன்பு பொங்க, ஆசைகள் பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க என்றும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்கட்டும் என பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் முத்துப்பிள்ளை பாளையம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள், சாய் இளங்கோவன் அறக்கட்டளை நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக