புதுவையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து குடும்ப அட்டைக்கும் ரூ. 490 மதிப்புள்ள 10 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கும் பணியினை முதலமைச்சர் ரங்கசாமி துவக்கி வைத்தார்
புதுச்சேரியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைக்கும் ரூ.490 மதிப்புள்ள பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்படும் என கடந்த சில நாட்களுக்கு முன் முதல்வர் ரங்கசாமி அறிவித்து இருந்தார்.
அதன்படி இன்று, கதிர்காமம் தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப் பள்ளி எதிரில் அமைந்துள்ள நியாய விலை கடையில் 10 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பினை முதலமைச்சர் ரங்கசாமி பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சாய் ஜெ. சரவணன் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆறுமுகம், ரமேஷ், குடிமைப் பொருள் வழங்கல் துறை செயலர் உதயகுமார், கூட்டுறவு சிறப்பு செயலாளர் கண்ணன், குடிமைப்பொருள் துறை இயக்குனர் சக்திவேல், மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக