புதுச்சேரியில் 4 நாட்கள் நடைபெற்ற அகில உலக யோகா விழாவின் நிறைவு விழாவில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் ரங்கசாமி சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார்
புதுச்சேரி அரசு சுற்றுலா துறை சார்பில் ஜனவரி 4 ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை 27-வது அகில உலக யோகா திருவிழா நடைபெற்று வந்த நிலையில் அதன் நிறைவு விழா இன்று கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடலில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
மேலும் விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், சுற்றுலாத் துறை செயலர் அருண், சுற்றுலா துறை இயக்குனர் பிரியதர்ஷினி ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுற்றுலா துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக