முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்த நிலை உங்களுக்கும் வரும்.! ரங்கசாமியை எச்சரிக்கும் மணிகண்டன்.!

புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla., வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,

புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் இல்லை. மக்கள் பிரதிநிதியாக நினைத்ததை செய்ய முடியாமல், மாநில அந்தஸ்து கிடைக்காமல், மன உளைச்சலில் உள்ளேன் என முதலமைச்சர் மேடைக்கு மேடை கபடநாடகம் ஆடி வருகிறார். முதலமைச்சர் முதலில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அவர்களுக்கான உரிமையை வழங்குவாரா ?

ஏனாம் பிராந்தியத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சுயேச்சை சட்டமன்ற உறுப்பினராக கொல்லப்பள்ளி சீனிவாச அசோக் உள்ளார். அந்த பிராந்தியத்தில் போட்டியிட்டு முதலமைச்சர் தோல்வியை தழுவினார். மக்கள் தீர்ப்பை மகேசன் தீர்ப்பாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அவரிடத்தில் இல்லை. இதனால் முதலமைச்சர் சர்வாதிகார நோக்கோடு, முன்னாள் அமைச்சருக்கு டெல்லி சிறப்பு பிரதிநிதி என்ற பதவியை வழங்கினார். முதலமைச்சரால் வழங்கப்பட்ட பதவியை வைத்துக்கொண்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினருக்கு எல்லாவிதத்திலும் முன்னாள் அமைச்சர் தொல்லை கொடுத்து வருகிறார்.

டெல்லி சிறப்பு பிரதிநிதியாக புதுச்சேரி அரசு சார்பில் எத்தனை முறை டெல்லி சென்றார் ? என்ன திட்டங்களை கொண்டுவந்தார் ? எவ்வளவு நிதியை பெற்றுத்தந்தார் ? முதலமைச்சர் அளித்த பதவி புதுச்சேரி மாநிலத்தை வளர்ச்சி பெற செய்ய வழங்கப்பட்டது அல்ல, சுயேச்சை எம்.எல்.ஏ.வின் அடிப்படை உரிமைகளை குழிதோண்டி புதைப்பதற்குத்தான் என்பது வெட்ட வெளிச்சமாகி வருகிறது.

ஒவ்வொரு தொகுதியிலும் உதவித்தொகை ஆணையை மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினரே பயனாளிகளுக்கு வழங்குவது வாடிக்கை. ஆனால் ஏனாம் பிராந்தியத்தில் முதலமைச்சர் தூண்டுதலால் மண்டல நிர்வாக அதிகாரி, உதவித்தொகை வழங்கும் விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு ஆணை வழங்க வரும்படி முன்னாள் அமைச்சருக்கு அழைப்பு அனுப்பியுள்ளார். ஒரே மேடையில் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினரை வைத்துக்கொண்டே, முன்னாள் அமைச்சர் மூலம் பயனாளிகளுக்கு ஆணையை வழங்க வைத்துள்ளார். இதை தன்மானம் உள்ள எவரும் தட்டிக்கேட்பது நியாயமான ஒன்று.

சுயேச்சை எம்.எல்.ஏ தனது உரிமை கண்முன்னே பறிக்கப்படுவதை கண்டு வேதனைப்பட்டு, வெளியேறியுள்ளார். இந்த காட்சியை அரங்கேற்ற வேண்டும் என்பதற்காகத்தான் டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமிக்கப்பட்டாரா ? இதே இடத்தில் இன்னாள் முதலமைச்சர், முன்னாள் முதலமைச்சராக ஆகும்போது ஏற்றுக்கொள்வாரா ?

ஹிட்லர் போன்ற முதலமைச்சரின் சர்வாதிகார செயல்பாடை தட்டிக்கேட்காமல், கட்சி பாகுபாடின்றி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் மவுனம் காப்பது உங்கள் உரிமையை மட்டுமல்ல, உங்களுக்கு வாக்களித்த மக்களின் உரிமையையும் பறிக்கும் செயல் என்பதை நினைவூட்டுகிறேன். புதுச்சேரியில் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவளிக்கும் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினருக்கே இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலை புதுச்சேரி மாநில மக்கள், பாரதீயஜனதா கட்சி மீது வைத்திருந்த நம்பிக்கையை சிதைத்துள்ளது.

நாகரீகமற்ற இந்த அரசியல் காழ்ப்புணர்ச்சியை மேதகு துணை நிலை ஆளுநர் தட்டிக்கேட்டு, தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் மேதகு துணை நிலை ஆளுநர் தனக்குள்ள அதிகாரத்தை நேரடியாக பயன்படுத்தி, புதுச்சேரியில் உள்ள மற்ற தொகுதிகளிலும் சட்டமன்ற உறுப்பினரை எதிர்த்து போட்டியிட்டவர்களுக்கு வாரிய தலைவர் பதவிகளை வாரி வழங்கலாம். புதுச்சேரி ஹிட்லரின் எண்ணத்தை நிறைவேற்ற, ஒவ்வொரு தொகுதியிலும் கோஷ்டிபூசல்களை உருவாக்கலாம். புதுச்சேரியின் வரலாறு, மாண்புகளை சீர்குலைக்க அடித்தளம் அமைக்கலாம். 

இந்த குரூர எண்ணம் கொண்ட அரசியல்போக்கு, புதுச்சேரி மாநிலத்திற்கு உகந்தது அல்ல. இதேநிலை இன்று மமதையோடு ஆட்சி பீடத்தில் அமர்ந்திருப்பவர்களுக்கும் வரும்காலத்தில் ஏற்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...