புதுச்சேரியில் முதல் முறையாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சமூக வலைதளங்கள் மற்றும் உள்ளூர் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் தயாளன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவை செயலாளர் தயாளன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
புதுச்சேரி 15வது சட்டப்பேரவையின் 4வது கூட்டத்தொடர் நாளை (09.03.2023) காலை 9.45 மணியளவில் துணைநிலை ஆளுநர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் உரையுடன் தொடங்குகிறது. துணைநிலை ஆளுநர் உரையினை சமூக ஊடகங்களான YouTube, Facebook மற்றும் Twitter போன்றவைகளின் வாயிலாக நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் கீழ்காணும் முகவரியில் (URL) காணலாம்.
1.YouTube : https://www.youtube.com/watch?v=nVvsLD3zeVE
2. Facebook : https://www.facebook.com/events/732629861834579/
3. Twitter : https://twitter.com/utofpuducherry
2. மேலும், புதுச்சேரி தூர்தர்ஷன் தொலைக்காட்சி, துணைநிலை ஆளுநர் உரையினை நேரடியாக ஒளிபரப்பு செய்ய உள்ளது. இதனை பொதுமக்கள் https://www.youtube.com/watch?v=236wP2u8Cwl என்னும் முகவரியில் காணலாம்.
3. இது தவிர, இந்நிகழ்வினை உள்ளுர் தொலைக்காட்சி மூலமாக நேரடி ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
4. சட்டப்பேரவை நிகழ்வுகளை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக