தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் 100 கும் மேற்பட்ட அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்த தமிழக திமுக அரசை கண்டித்தும் ,உடனடியாக அந்த வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தியும் புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில்,அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டு தமிழக திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
அதன் பின்னர் செய்தியாளரிடம் பேசிய அன்பழகன்,
எடப்பாடி என்பவர் சாதாரண ஆள் இல்லை என்றும், 1.5 கோடி தொண்டர்களுக்கு தலைவராக இருக்கக்கூடியவர். அது மட்டும் இல்லாமல் ஒரு எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சரான அவருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய தமிழக அரசே, அவர் மீது திட்டமிட்டு பொய் வழக்கை போட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என்றும் ,முதலமைச்சர் ஸ்டாலினால் எடப்பாடி உயிருக்கு ஆபத்து உள்ளது என்று குற்றம் சாட்டினார்.
திமுகவின் பி டீமான ஓபிஎஸ்யும் ,டிடிவி தினகரன் சூழ்ச்சிகளை முறியடித்து அதிமுகவையும் சின்னத்தையும் மீட்டெடுத்த எடப்பாடி பழனிச்சாமியை, எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று திமுக திட்டமிட்டு அவர் மீது பொய் வழக்கு போட்டுள்ளதாக குற்றம் சாட்டிய அவர்,எடப்பாடியார் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் இல்லை என்றால் மாநிலம் ஸ்தம்பிக்கும் ஸ வகையில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
கருத்துகள்
கருத்துரையிடுக