புதுச்சேரி 15-வது சட்டப்பேரவை நான்காவது கூட்டத்தொடரில் இன்று (28/03/2023) பூஜ்ஜியம் நேரத்தில் பேசிய உருளையன்பேட்டை தொகுதி சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு,
இந்து அறநிலையத்துறையானது திருக்கோயில்களில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளை பற்றி வரும் புகார்களை கண்டுகொள்வதில்லை. ஏனென்றால் இந்த துறையின் உள்ளவர்களே ஊழல் செய்பவர்களாக இருக்கிறார்கள்.
மகாத்மா காந்தி வீதியில் உள்ள ஈஸ்வரன் கோயில் கும்பாபிஷேகத்திற்கு செய்த செலவுகளில் முறைகேடு மற்றும் பெரியளவில் ஊழல் நடந்துள்ளது. இது பற்றி புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லாமல் உள்ளது. அதே போல கோயிலுக்கு சொந்தமான 1. பெல்காம் வீதி, 2. தியாகுமுதலியார் வீதி, 3.பெருமாள்கோயில் வீதி ஆகிய மூன்று இடங்களில் இருந்த பழைய கட்டிடங்களை இடித்து அகற்றிய போது அதிலிருந்த மர வாசகால்கள் மர திராய்கள் மற்றும் அதிலிருந்து கிடைத்த இரும்பு தளவாடங்கள் யாவும் கோயில் கணக்கில் வரவு வைக்கவில்லை.
அதே போல வேதபுரீஸ்வரர் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான கதவு எண்:58 காமாட்சியம்மன் கோயில் தெருவில் உள்ள ஒரு சொத்தை தனிநபர் ஆக்கிரமித்து அவர்களுக்கு சொந்தமாக்க முயற்சிப்பதை தடுக்காமல் இந்த கோயிலின் ட்ரஸ்டிகளே துணை போகும் விதமாக இருக்கிறார்கள்.
மேற்கண்ட கோயிலுக்கு சொந்தமான அந்த இடத்தின் பட்டா போன்ற ஆவணங்கள் அரசு பதிவேடுகளில் கோயிலுக்கு சொந்தம் என்று உள்ள நிலையில் இந்த கோயில் ட்ரஸ்டி மற்றும் நிர்வாகிகள் ஆக்கிரமிப்பாளருக்கு துணைப்போகும் விதமாக அந்த இடம் கோயிலுக்கு சொந்தமானது இல்லை என்று கடிதம் கொடுத்திருக்கிறார்கள். இதுபற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும்.
அதே போல வரதராஜ பெருமாள் கோயிலில் 3.02.2023 அன்று உண்டியல் திருட்டு சம்பவம் நடைபெற்றது. இது சம்மந்தமாக காவல் நியைலத்தில் எந்தவொரு புகாரும் அளிக்கவில்லை என்று தெரிகிறது. இதிலேயும் கோயில் நிர்வாகத்திற்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அதே போல கீழ் நிலையில் இருந்த அரசு ஊழியர் ஒருவர் 2014 ஆம் ஆண்டு முறைகேடாக குரூப் பதவிக்கு உயர்த்தப்பட்டு Executive Officer ஆக மேற்கண்ட கோயிலுக்கு பணியமர்த்தப்பட்டார். அவர் மேற்கண்ட கோயிலில் பணியமர்த்தப்பட்ட காலத்தில் பெரியளவில் ஊழல் நடந்தது நிரூபிக்கப்பட்டுள்ளது.
கும்பாபிஷேகம் நடத்த கூடிய வேதவிற்பனர்கள் (சிவாச்சாரியர்) ஊதியமாக 29 லட்சம் பணமாக கொடுக்கப்பட்டதாகவும் அதே போல கும்பாபிஷேகத்திற்காக அமைக்கப்பட்ட அலங்கார விளக்குகள் அமைக்க தன்னிச்சையாக ஒரு நிறுவனத்திற்கு ஏறக்குறைய 73 லட்சம் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல கோயில் திருப்பணி செலவுகளில் பல முறைகேடுகள் நடந்துள்ளது கண்கூடாக தெரியவந்துள்ளது. இதன் மேல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது உள்ள ட்ரஸ்டிகளும் இதற்கு உடந்தையாக உள்ளார்கள். அவர்களிடமும் உரிய விசாரனை நடத்தப்பட வேண்டும் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
கருத்துகள்
கருத்துரையிடுக