புதுச்சேரியில் மாநில அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆணவத்தின் உச்சத்தில் அதிமுகவை குறைத்து பேசி வருகிறார். அண்ணாமலை அவர்களுக்கு அதிமுகவை பற்றியோ, நிரந்தர பொதுச்செயலாளர் மாண்புமிகு எடப்பாடியார் பற்றியோ பேச எந்த தகுதியும் கிடையாது.
பொதுவாக ஒரு கட்சியில் தொண்டராக இருந்து பல்வேறு பொறுப்புகளை ஏற்று ஒரு கட்சிக்கு தலைமை தாங்கி வரும்போது தான் கட்சியின் நிலைபாடுகள் பற்றி கூறி தெரியும். நேரடியாக அண்ணாமலை போன்றவர்கள் தலைமை பொறுப்புக்கு வந்ததால் ஆணவத்தின் உச்சியில் அரசியல் என்றால் எண்ணவென தெரியாத வகையில் உலரிக்கொண்டு இருக்கிறார். அதிமுகவில் இருந்து பல நிர்வாகிகள் பாஜகவில் சேரும் போது கூட நாங்கள் அமைதிதான் காத்தோம். அப்போது கூட்டணி, கட்சியின் பண்பு, மாண்புகள் பாஜகவுக்கு இருந்ததா? இல்லை. பாஜகவின் சர்வாதிகார தனத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் அந்த கட்சியினிடைய நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர். அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் எடப்பாடியார் உருவபடத்தை எரிப்பது என்பது அநாகரீகத்தின் உச்சகட்டம். அம்மா போல இருப்பேன் என்பது திமிர்பிடித்த பேச்சு. அதற்கு இவர் அதிமுகவில் தான் இருக்கனும். பாஜகவில் இவருக்கு ரோல் மாடல் யாரும் இல்லையா? பிரதமர், உள்துறை அமைச்சர் என பலரும் உள்ளனர். அண்ணாமலை யாருடைய வாயாக இருப்பதாக தெரிகிறது. தமிழக தலைவர் பாஜக அண்ணாமலை எங்களுக்கு எதிரியின் வாயாக இருக்கிறார். சென்னையில் இன்று நடைபெறும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அண்ணாமலை விவகாரம் குறித்து பேசப்படும்.
புதுச்சேரி அரசுக்கு பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அவப்பெயரை ஏற்படுத்துகின்றனர்.குடிமை பொருள் வழங்கல் துறைக்கு சென்று அங்கிருந்த அதிகாரியை மிரட்டல் விடுத்து பேசியது தவறான ஒன்று. அந்த துறை அமைச்சரை வைத்துக்கொண்டு பேசினர். ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொண்டு இப்படி அதிகாரிகளிடம் தவறான போக்கில் நடப்பதை திருத்திக்கொள்ள வேண்டும். மக்களுக்கு இந்த ஆட்சியின் மீது அவப்பெயரை ஏற்படுத்தும் செயலாக உள்ளது. உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் இதுபோன்று மீண்டும் அனுமதிக்க கூடாது.
புதுச்சேரியில் கடந்த காங்கிரஸ் திமுக அரசுக்கு எதிராக வாக்கு அளித்த மக்களுக்கு எதிராக பாஜக அமைச்சர்கள் செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
பாஜகவினர் சந்தர்ப்பவாத அரசியல் வரும் பாராளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும். அதிகாரியை வாய்க்கு வந்தபடி தவறாக பேசகூடாது. நமது ஆட்சியில் மக்களுக்கு வீண் கலங்கம் ஏற்படுத்தும் விதத்தில் பாஜகவின் செயல்பாடு இருக்க கூடாது.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது காரைக்கால் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஓமலிங்கம் உடனிருந்தார்.
கருத்துகள்
கருத்துரையிடுக