முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொறுப்பில்லாத சட்டமன்ற உறுப்பினர்கள்.! அதிமுக விமர்சனம்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் அவர்கள் இன்று (25-03-2023) தலைமை கழகத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:

புதுச்சேரியில் நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடர் நிறைவடைய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் மாநில வருவாய் சம்பந்தமாகவும், சமூக சமுதாய பிரச்சனைகள் சம்பந்தமாகவும், மாணவ மாணவிகளின் நலன் சம்பந்தமாகவும் அரசின் கவனத்திற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்டுவராதது பொறுப்பற்ற செயலாகும்.

உதாரணத்திற்கு தனியார் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் 50 சதவீத இடஒதுக்கீட்டினை உறுதி செய்ய உரிய சட்டம் கொண்டுவரப்படவில்லை. அரசு பள்ளியில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களுக்காக தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் மாண்புமிகு எடப்பாடியர் கொண்டுவந்த அரசு உள்ஒதுக்கீட்டில் 7.5 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் சார்ந்த படிப்பில் உள்ஒதுக்கீடு வழங்கியது போல் புதுச்சேரி அரசின் கவனத்திற்கு யாரும் கொண்டுவரவில்லை. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் சட்டத்திற்கு புறம்பான பிராந்திய ரீதியான இடஒதுக்கீட்டை தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதால் புதுச்சேரியை சேர்ந்த மாணவர்கள் பெரும்பாதிப்புக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத ஒரே மாநிலம் என்ற பிரதமரின் கருத்துக்கு வலு சேர்க்கின்ற விதத்தில் தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசப்படவில்லை. மதுபான வியாபாரத்தில், மதுபான கொள்முதலும், மதுபான விநியோகமும் அரசே செய்திட அரசின் சார்பில் ஒரு கார்பரேஷன் அமைத்து ஆண்டுக்கு 1000 கோடி ரூபாய் கூடுதல் வருமானத்தை தர அரசின் கவனத்திற்கு யாரும் கொண்டுவரவில்லை.
Ji
இதுபோன்ற மாநிலத்திற்கு முக்கிய பிரச்சனைகள் குறித்த சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் பேசவில்லை, எதிர்கட்சி தலைவர் உள்ளிட்ட பல முக்கிய சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர் செய்யும் வர்த்தக வியாபார நோக்கத்திற்கு பாதிப்பு ஏற்படும் என செயல்படுவதால் மாநில மக்களின் நலன் பின்னுக்க தள்ளப்பட்டுள்ளது. மக்கள் நலன் சார்ந்த பல முக்கிய பிரச்சனைகளில் மாண்புமிகு முதலமைச்சரே தானாக முன்வந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

தமிழக திமுவை சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி என்பவர் தொடர்ந்து ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட சில பிரிவினரை திருப்திப்படுத்த மற்றவர்களை சமூ ரீதியில் குறிப்பிட்டு குறை கூறி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடுவதில் குறியாக உள்ளார். அவரின் கருத்துக்கள் மூலம் பலமுறை மக்கள் மத்தியில் போராட்டங்களும், கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு உயர்நீதி மன்றத்தில் அட்டவணை இனத்தை சேர்ந்தவர்கள் நீதிபதிகளாக இருப்பது திமுக போட்ட பிச்சை தான் காரணம் என்ற கருத்தை கூறினார். தற்போது தமிழ்நாட்டின் மாபெரும் தலைவர்களுன் ஒருவராக இருந்த பெருந்தலைவர் காமராஜர் மற்றும் அவரது சமூகத்தை பற்றி திட்டமிட்டு குறைகூறி பேசி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கலவர பூமியாக மாறும் சூழ்நிலைக்கு பெசியுள்ளார். அவர் மீது சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து அவதூறு குறித்து பேசும் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து புதுச்சேரி மாநில முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இது ஒரு ஜனநாயக படுகொலை என கூறியுள்ளார். இதுபோன்ற கருத்துகளை கூற நாராயணசாமிக்கு குறைந்தபட்ச தகுதி கூட இல்லை. அவருக்கு எந்த அறுகதையும் இல்லை.

உதாரணத்திற்கு என்.ஆர்.காங்கிரசை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினராக இருந்த அசோக் ஆனந்த் அவர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் உடனடியாக அவரது பதவியை ரத்து செய்தவர் அப்போதைய முதலமைச்சராக இருந்த நாராயணசாமி, மேலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தனவேலு என்ற எம்.எல்.ஏ மாற்று கட்சிக்கு செல்வதாக எந்த விதமான ஆதரமற்ற குற்றச்சாட்டை கூறி அவரை தகுதி நீக்கம் செய்தவர் நாராயணசாமி. எனவே ஜனநாயகத்தைப்பற்றி பேச அவருக்கு எந்த அறுகதையும் கிடையாது.

மக்கள் பிரிதிநிதித்துவம் சட்டம் பிரிவு 8(4) இதன் படி மக்கள் பிரதிநிதிகள் பதவி நீக்கம் செய்ய 3 மாதம் காலம் அவகாசம் இருந்தது. அந்த பிரிவை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததை பாராளுமன்ற அவசர சட்டத்தின் மூலம் தடுத்திருக்கலாம். 2013-ம் ஆண்டு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சியின் போது திரு.ராகுல்காந்தி அவர்கள் கொண்டுவரப்பட இருந்த அவசர சட்டத்தை தடுத்து நிறுத்தி உச்சநீதிமன்ற உத்தரவை உறுதிப்படுத்தினார். மக்கள் பிரதிநிதித்துவம் சட்டப்படி நீதிமன்றத்தில் 2 ஆண்டுகளுக்கு மேலாக குற்றவாளிகள் என எந்த நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டாலும் அவர்களது பதவியை உடனடியான நீக்கம் செய்யப்படுவதற்கு அப்போதைய ஆட்சியில் இருந்த திமுக காங்கிரஸ் தான் காரணம்.

மக்கள் பிரதிநிதித்துவம் சட்டப்படி 2 ஆண்டு தண்டனை பெற்ற உடனே பதவி போய்விடும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவுக்கு நேர்மாறாக தமிழக முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள் தற்போது கேள்வி எழுப்புகிறார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கும் திரு. ஸ்டாலின் அவர்கள் உச்சநீதிமன்ற சட்டத்தையே கேள்வி எழுப்புவது வியப்பாக இருக்கிறது. இந்த சட்டம் கொண்டுவரப்பட்டு 9 ஆண்டுகாலம் ஆகியுள்ள நிலையில் இந்தியாவில் எத்தனையோ அரசியல்வாதிகள் இந்த சட்டத்தின் மூலம் பதவியை இழந்துள்ளனர். மாண்புமிகு புரட்சிதலைவி அம்மா அவர்களும் கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியின் போது அந்த மாநிலத்தில் வழங்கப்பட்ட கீழமை நீதிமன்றத்தில் தவறாக வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம் தனது எம்எல்ஏ மற்றும் முதலமைச்சர் பதவியை இழந்தார். அதன் பிறகு அதே வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் குற்றமற்றவர் என தீர்ப்பு வழங்கினார். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் தீர்ப்புக்கு முன்பே மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்கள் முதலமைச்சர் பதவியை இழந்த போது தற்போது ஜனநாயகத்தை பற்றி பேசும் காங்கிரஸ் திமுக கூட்டணி கட்சிகள் அப்போது வாய்மூடி மவுனம் காத்தது ஏன்.
இவ்வாறு கூறினார். பேட்டியின் போது மாநில இணைச் செயலாளர், முன்னாள் கவுன்சிலர் கணேசன், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

கருத்துகள்