வில்லியனூர் தொகுதி பாஜக பிரமுகர் சீனிவாசன் பிறந்தநாளையொட்டி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேரில் சென்று சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்
புதுச்சேரி பாரிஸ் கார்னர் உரிமையாளரும் வில்லியனூர் தொகுதி தட்டாஞ்சாவடி பகுதி பாஜக பிரமுகர் சீனிவாசன் பிறந்தநாளை அவரது ஆதரவாளர்கள் மற்றும் பாஜகவினர் வெகு விமர்சையாக கொண்டாடினர்.
அதனைத் தொடர்ந்து, தட்டாஞ்சாவடி பகுதியில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில், சீனிவாசன் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு கேக் வெட்டி, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தட்டாஞ்சாவடி குளத்து மேட்டு தெருவில் அமைந்துள்ள அறிவொளி விநாயகர் ஆலயத்திற்கு 20, ஆயிரம் திருப்புணிக்காக நன்கொடை வழங்கினார்.
விழாவில் பாஜக மாநில செயலாளர் மோகன் குமார், வில்லியனூர் தொகுதி தலைவர் ரவிச்சந்திரன், துணைத்தலைவர் தட்சிணாமூர்த்தி, வில்லினூர் தொகுதி பொறுப்பாளர் கண்ணபிரான், முகமது யூனஸ் உட்பட மாநில மற்றும் தொகுதி பாஜக நிர்வாகிகள், பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் ஆகியோர் நேரில் சென்று, சீனிவாசனுக்கு சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக