உருளையன்பேட்டை தொகுதி பாஜக துணை தலைவர் மார்ட்டின் சார்லஸ் பிறந்தநாளையொட்டி புதிய பேருந்து நிலையம் அருகே ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது se
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி பாஜக துணை தலைவர் மார்ட்டின் சார்லஸ் பிறந்தநாளை தொகுதி பாஜகவினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொகுதி முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டனர்.
விழாவின் ஒரு பகுதியாக, புதிய பேருந்து நிலையம் அருகே ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராக மார்ட்டின் சார்ல்ஸ் மற்றும் சமூக சேவகர் மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டு 100கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயபிரகாஷ், அஷ்ரப் தீன், வெங்கடேசன், பிரகாஷ், ஜோசப், உட்பட தொகுதி பாஜக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக