வாஸ்கோ நிறுவனத்தின் 2ஆம் ஆண்டு விருது வழங்கும் விழா நவம்பர் மாதம் புதுச்சேரியில் நடைபெற உள்ளதாக நிறுவனத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர்
புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த வாஸ்கோ நிறுவனத்தின் இயக்குநர் ஆனந்த்,
புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் கடந்த 15 ஆண்டுகளாக வாஸ்கோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது என்றும், சுற்றுலா பயணிகளுக்கு மாத இதழ், டிஜிட்டல் சேவைகள் மற்றும் சுற்றுலா இடங்களின் வரைபடங்களை இலவசமாக வழங்கி வருவதாக தெரிவித்தார்.
மேலும், பல்வேறு துறைகளில் உள்ள நிபுணர்களை கொண்ட குழு மூலம், திறமையானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு வாஸ்கோ நிறுவனம் விருது வழங்கி கௌரவித்து வருகிறது என்றும், வாஸ்கோ நிறுவனத்தின் 2 ஆம் ஆண்டு பீப்பிள் சாய்ஸ் அவார்ட் விருது வழங்கும் விழா நவம்பர் மாதம் புதுச்சேரியில் நடைபெற உள்ளதாக கூறினார்.
உணவகங்கள், ரெஸ்டோ பப்கள், சுற்றுலா, பேஷன் புகைப்படம், நீர் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 30 பேரை தேர்ந்தெடுத்து விருது வழங்க உள்ளதாக தெரிவித்த அவர்,புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்துவதில் வாஸ்கோ நிறுவனம் தொடர்ந்து முன்மாதிரியான முயற்சிகளை எடுக்கும் என தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது, விருது வழங்கும் குழுவினர் பாலாஜி, கிருஷ்ணா பிரதாப்,ஸ்வேதா,அனு சந்திரன், டாக்டர் சுப்ரியா, ராஜஸ்ரீ,அனிதா,பாலாஜி, அருள்,உமா ப்ராஜாபதி உட்பட வாஸ்கோ நிறுவனத்தின் குழுவினர் உடன் இருந்தனர்
கருத்துகள்
கருத்துரையிடுக