முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சர்வாதிகாரி, கொடுங்கோல் ஆட்சியில் கூட இப்படி ஒரு திட்டத்தை வகுக்க முடியாது..! புதுச்சேரி அரசுக்கு அதிமுக கண்டனம்..!

புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,

புதுச்சேரி மாநிலத்தில் 10 தொழிலாளர்களுக்கு மேல் பணியாற்றும் கடைகள், வணிக நிறுவனங்கள், விடுதிகள், உணவகங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களையும் 24 மணி நேரமும் திறந்து வைக்கலாம் என அதிமேதாவித்தனமான அறிவிப்பை அரசின் சார்பு செயலர் வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பின் முழு நோக்கமும் இரவு நேரத்தில் மதுபான கடைகளை திறப்பது ஒன்று மட்டுமே குறிக்கோளாக கொண்டது. அரசியல் ஆதாயத்திற்காகவும், சாராய வியாபாரிகளை திருப்திப்படுத்தவும், மக்களைப்பற்றிய சிந்தனை துளியும் இன்றி சுயநல லாப நோக்கோடும்தான் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

புதுச்சேரி மக்களின் உயிர் பிரச்சினைக்காக அரசு மருத்துவமனைகள் கூட 24 மணி நேரமும் செயல்படுவது இல்லை. இரவு நேரங்களில் டாக்டர்கள் பணியில் இருப்பதில்லை. அரசு மருத்துவக்கல்லூரியில் அவசர சிகிச்சை அரைநாளோடு மூடப்படும் அவலம் நிலவுகிறது. இரவில் விபத்தில் சிக்குபவர்களுக்கு அவசர சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. அத்தியாவசிய தேவையான மருந்துகள்கூட இரவில் கிடைப்பதில்லை. இதை சரிசெய்ய எந்த முயற்சியும் அரசிடம் இல்லை.

புதுச்சேரியில் 24 மணி நேரமும் மதுபான கடைகள், வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டால் சட்ட ஒழுங்குதான் சீர்கெடும். ஏற்கனவே ஒவ்வொரு காவல்நிலையத்திலும் காவலர்கள் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. அப்படியிருக்க, 24 மணி நேரமும் பாதுகாப்பு, போக்குவரத்து பணியில் யார் ஈடுபடுவார்? ஏற்கனவே வார இறுதி நாட்களில் வெளிமாநில இளைஞர்கள் வருகையால், புதுச்சேரி கலாச்சார சீரழிவில் சிக்கி தவிக்கிறது. 24 மணி நேர அனுமதியளித்தால் புதுச்சேரி கலாச்சாரம் முற்றிலும் சீர்குலையும். போதைப்பொருள் நடமாட்டம், விபச்சாரம், பாலியல் வன்கொடுமைகள், அண்டைமாநில சமூகவிரோதிகளின் கூடாரமாக புதுச்சேரி மாறும்.

ஏற்கனவே புதுச்சேரியில் உள்ள பிரபல ஜவுளி கடைகள், பன்னாட்டு நிறுவனங்களில் சொற்ப சம்பளத்துக்கு புதுச்சேரி மாநில இளைஞர்களும், இளம்பெண்களும் கொத்தடிமைகளாக வேலைபார்க்கின்றனர். அரசின் இந்த அறிவிப்பால் புதுச்சேரி இளைஞர்கள் உழைப்பு மேலும் சுரண்டப்படும். கட்டாயமாக தொடர் பணியில் ஈடுபட வற்புறுத்தப்படுவர். இதனால் அவர்கள் உடல்நலம் பாதிக்கப்படும். இளம்பெண்களுக்கு அநீதி இழைக்கப்படும்.

சர்வாதிகார, கொடுங்கோல் ஆட்சியில்கூட இப்படியொரு திட்டத்தை வகுக்க யாருக்கும் தைரியம் வராது. இளம்பெண்களை விதவைகளாக மாற்றும் மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கிய அரசு, அந்த மது வகைகளை விற்பனை செய்ய இத்திட்டத்தை நயவஞ்சகமாக வகுத்துள்ளது. இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. புதுச்சேரி மாநிலத்தின் கலாச்சார சீரழிவை அதிமுகஒருபோதும் ஏற்காது. புதுச்சேரி அரசு உடனடியாக இந்த அறிவிப்பை வாபஸ்பெற வேண்டும்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...