முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாண்லே தொழிற்சங்கத்தினருக்கு கொலை மிரட்டல்..!இயக்குனரை மாற்ற கோரி நாம் தமிழர் கட்சியினர் கவர்னர், முதல்வரிடம் புகார்..!

புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளர் ரமேஷ், துணை நிலை ஆளுநர், முதலமைச்சரிடம் அளித்துள்ள புகார் மனுவில்,


புதுச்சேரி பாண்லே நிறுவனத்திற்கு சொந்தமான பார்லார்களுக்கு (பூத்)ஒரு நாளைக்கு 17 ஆயிரம் லிட்டர் பால் அனுப்ப வேண்டிய சூழலில் ஏழாயிரம் லிட்டர் பால் மட்டுமே பாண்லே நிர்வாகத்தால் 
வழங்கப்பட்டு வருகிறது 

புதுச்சேரி முழுவதும் பாண்லே நிறுவனத்தின் பாலினை விற்பனை செய்யும் சுயத்தொழிலில் படித்த இளைஞர்கள் ஏழை எளிய 250க்கு மேற்பட்ட குடும்பங்கள் தங்களை பாண்லே நிறுவனத்தின் முகவர்களாக இணைத்துக்கொண்டு 
பாண்லே நிறுவனத்தின் பாலினை நாள் தோறும் 80ஆயிரம் லிட்டர்  
பால் விற்பனையில் முதன்மையானவர்களாக பணிபுரிந்து வரும் முகவர்களுக்கும் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக பாண்லே நிறுவனத்தின் பால் குறைத்து வழங்கப்படுகிறது 

புதுச்சேரி அரசு பாண்லே நிறுவனத்தின் சொந்தமான பார்லார்களுக்கு (பூத்) அருகில் எந்தவித வித சட்டரீதியான நடவடிக்கையின் பின்பற்றாமல் ஆட்சியாளர்களின் ஆதரவாளர்களுக்கு பால் பார்லார்களை (பூத்) நடத்துவதற்கு அனுமதி வழங்குவதும்  

தனிநபர்களுக்கு ஏஜன்சி என்ற அடிப்படையில்,புதிய பாண்லே பாலகம் அமைக்க அரசு பாண்லே பாலகத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைக்க வேண்டும் என விதிமுறைகள் இருந்தும் ஆட்சியாளர்கள் ஆதரவுடன் இயக்குனர் முரளி அதிகார துஷ்பிரயோகம் செய்து, ஒரு சென்டிமீட்டர் இடைவெளி இல்லாமல், ராஜீவ் காந்தி மகளிர் மருத்துவமனை புதிய பேருந்து நிலையம், மேட்டுப்பாளையம் உட்பட பல இடங்களில், ரவுடிகளுக்கும் கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களுக்கும் பாலகங்கள் அமைக்க அனுமதி வழங்கியுள்ளதால், அரசுக்கு பெருமளவு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாண்லே தொழிற்சங்கத்தினரை ரவுடிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவமும் அரங்கேறியுள்ளது.
 இத்தகைய செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தொழிற்சங்க நிர்வாகிகளை மிரட்டும் நடவடிக்கையில் ஈடுபடும் ஆட்சியாளர்களின் ஆதரவாளர்களின் செயல்பாட்டினை நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

பாண்லே நிறுவனத்தின் பால் அங்காடிகளில் விற்பனைக்கு தேவையான பாலினை பாண்லே நிறுவனத்தினால் வழங்கப்படாமல் செயற்கையான பால் தட்டுப்பாட்டினை தன்னுடைய சுய லாபத்திற்காக திட்டமிட்டு உள்நோக்கத்தோடு பாண்லே நிர்வாக அதிகாரி திரு
மலர்கண்ணன் அவர்களும்
 பாண்லே நிர்வாகமேலாண் இயக்குநர் திரு முரளி அவர்களும் உருவாக்கிவருகின்றனர்
 
பால் கூட்டுறவு நிறுவனத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு மானிய விலையில் தீவனம் வழங்குவதற்கு 
புதுச்சேரி அரசு ரூபாய் 4.05 கோடி நிதியினை ஒதுக்கீடு செய்தும் இந்நாள்வரைபால் 
உற்பத்தியாளர்களுக்கு 
 தீவனம்வழங்கப்படாமலும்
பால் உற்பத்தியாளர்களுக்கு
 தீவனம் வழங்குவதற்குரிய
நடைபெற்ற இணையதள ஏல(e-tender) விற்பனையில் முன்னுரிமை பெற்ற நிறுவனத்திற்கு அனுமதியினை வழங்காமல் நிர்வாக அதிகாரி திரு மலர்கண்ணன் நிர்வாக மேலாண் இயக்குனர் திரு முரளி இருவரும் இணைந்து இந்நாள் வரை திட்டமிட்டு தன் சுய லாப நோக்கத்தோடு உள்நோக்கத்தோடும் செயல்பட்டு வருவதும்
HOPSTICK நிறுவனத்திற்கு ஒரு லிட்டர் நெய் விற்பனை செய்வதற்கு ரூபாய் 120 கமிஷனாக வழங்கப்பட வேண்டிய சூழ்நிலையை திட்டமிட்டு உள்நோக்கத்தோடு உருவாக்கப்படுவதால் பாண்லே நிர்வாகம் மிகப்பெரிய நஷ்டத்தினை சந்தித்துவருகிறது
பாண்லே நிறுவனத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணிக்கொடை தொகை (Gratuity) ரூபாய்ஒன்பது கோடியும் பாண்லேநிறுவனத்திற்கு
பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்கள் மூலப்பொருட்கள் வழங்கியவர்களுக்கு தரவேண்டிய தொகை ரூபாய் 4 கோடியும் நிலுவையில் உள்ள சூழ்நிலையில்
பாண்லே நிறுவனம் மேன்மேலும் ஒன்பது கோடி நஷ்டத்தினை சந்தித்து வருகிறது

 பாண்லே நிர்வாகத்தின் நிர்வாகஅதிகாரி. திரு மலர்கண்ணன் 
நிர்வாக மேலாண் இயக்குனர் முரளி இருவரையும் உடனடியாக இருவர் மீதும் துறைரீதியான விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும்
பாண்லே நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்கள் தொழிலாளர்களின் வாழ்வுரிமையினையும் 
பணிபாதுகாப்பினையும்
 உறுதிச் செய்திடவும்  
புதுச்சேரி மாநிலம் மக்களுக்கு தங்கு தடையின்றி பாலினை வழங்கிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...