அதிமுக 51வது ஆண்டு தொடக்க விழா முத்தியால்பேட்டை தொகுதியில், கிழக்கு மாநில துணை செயலாளரும்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வையாபுரி மணிகண்டன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொன்விழா நிறைவும், 51 – ஆவது ஆண்டு தொடக்க விழா முத்தியால்பேட்டை தொகுதி அதிமுக சார்பில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
முத்தியால்பேட்டை காந்தி வீதியில் உள்ள திருக்குறள் மணிக்கூண்டு அருகே, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் அலங்கரிக்கப்பட்ட உருவப்படத்துக்கு மாநில துணை செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வையாபுரி மணிகண்டன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து,
பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது, தொடர்ந்து ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தொகுதி நிர்வாகிகள் உட்பட தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக