முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாண்லேவில் கொள்ளைப்புற நியமனம்; ஏஐடியுசி கண்டனம்..

ஏஐடியூசி மாநில பொதுச் செயலாளர் சேது செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

பாண்லே நிறுவனம் மக்களுக்கு சிறப்பான சேவைகளை செய்து வந்தது இடையில் சில ஆண்டுகள் இந்நிறுவனம் நிர்வாக சீர்கேடு காரணமாக நஷ்டத்தில் இயங்கியது. தற்பொழுது இதிலிருந்து மீண்டு நஷ்டமும் இல்லை, லாபமும் இல்லை என்ற நிலையில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் மூலம் பால், மற்றும் பால் பவுடர், நெய், வெண்ணெய், ஐஸ்கிரீம், மோர், பாதாம் பால், தயிர், போன்ற பொருட்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது, இந்த பொருட்களை விற்பனை செய்வதற்கு 60க்கும் மேற்பட்ட பார்லர்களும், 200க்கும் மேற்பட்ட முகவர்கள் மூலமாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக பாண்லே நிர்வாகம் விற்பனைக்காக கொள்முதல் செய்யும் பாலில் 80 சதமான பாலை முகவர்கள் மூலமாக விற்கப்பட்டு வருகிறது. தற்பொழுது பாண்லே நிர்வாகம் நடத்தி வந்த  சில பார்லர்கள் செயல்படுத்தாமல் மூடி வைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் நிறுவனம் நடத்தி வந்த ஐந்துக்கும் மேற்பட்ட பார்லர்களை தனியாருக்கு தாரை வார்த்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் நிரந்தர ஊழியர்கள் 650 பேரும், தினக்கூலி ஊழியர்கள் 60 பேரும், தொகுப்பூதியம் பெறுபவர்கள் 200 பேரும் மொத்தத்தில் 910 ஊழியர்கள் வேலை செய்து வருகிறார்கள்.  இந்த நிறுவனத்தில் ஆய்வகம் மற்றும் பால் கொள்முதல் பிரிவு, சொசைட்டி மூலமாக வரக்கூடிய பாலை ஆய்வு செய்யும் பணியில் 60 பேர் வேலை செய்து வருகிறார்கள். இந்த பிரிவில் 30 ஊழியர்கள் வேலை செய்தால் போதும் என்ற நிலையில் கூடுதலாக இந்த பிரிவில் பணி அமர்த்தப்பட்டுள்ளது. மார்க்கெட்டிங் அலுவலகத்தில் 100 பேர் இருந்து வருகிறார்கள். இந்த பிரிவில் 40 ஊழியர்கள் இருந்தாலே போதும். மெயின்டனன்ஸ் பிரிவில் 50 பேர் வேலை செய்து வருகிறார்கள். இங்கு 30 பேர் இருந்தால் போதும். பாண்லே தலைமை அலுவலகத்தில் 100 பேர் உள்ளனர். இங்கு 50 ஊழியர்கள் வேலை செய்தால் போதும். மாட்டு தீவன பிரிவில் 40 பேர் வேலை செய்து வருகிறார்கள். இங்கு 20 பேர் வேலை செய்தால் போதும் என்கின்ற நிலையில் இங்கும் கூடுதலாக ஊழியர்கள் இருந்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி டெப்டேஷன் பெற்று 20 ஊழியர்கள் வெளியில் இருந்து வருகிறார்கள். வேலைக்கு வரும் ஊழியர்கள் வேலை செய்யாமல் அட்டனன்சில் கையெழுத்து போட்டுவிட்டு 50 பேர் சென்று விடுகிறார்கள். 

ஐஸ்கிரீம் மற்றும் உபப் பொருட்கள் உற்பத்தி பிரிவு, பார்லர் விற்பனை பிரிவு, டெய்ரி பால் பாக்கெட் அடுக்கும் பிரிவு, இந்த பிரிவுகளில் வேலை செய்ய 500 ஊழியர்கள் தேவை. ஆனால், இந்த பிரிவுகளில் 350 ஊழியர்கள் மட்டுமே வேலை செய்து வருகிறார்கள். பாண்லே நிர்வாகம் ஆட்சியாளர்களுக்கு அஞ்சாமல் ஒட்டுமொத்தமாக இங்குள்ள ஊழியர்களை முழுமையாக பயன்படுத்தி வேலை வாங்கி விற்பனையை பெருக்கினால் நல்ல லாபத்தில் கொண்டு வர முடியும், இதை செய்யாமல் மேலும் புதிதாக 12 பேரை ஒரு சில தினங்களுக்குள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்கள். இத்தகைய செயல் மீண்டும் நஷ்டத்திற்கு கொண்டு போய் இங்குள்ள ஊழியர்களுக்கு ஊதியம் கிடைக்காமல் ஊழியர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும், இத்தகைய செயல் கண்டிக்கத்தக்கதாகும், எனவே பாண்லே நிர்வாகம், தேவைக்கு அதிகமாக முதலமைச்சரின் உத்தரவின் பேரில், கொல்லைப்புறமாக வேலைக்கு அமர்த்துவதை கைவிட வேண்டும், அதேபோல் புதிய பார்லர்களை தனியாருக்கு கொடுப்பதை கைவிட்டு பாண்லே நிர்வாகமே நடத்திட வேண்டும் என ஏ ஐ டி யூ சி தொழிற்சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...