முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

செந்தில் பாலாஜியால் தமிழகத்திற்கு தலைகுனிவு.! புதுச்சேரி அதிமுக குற்றச்சாட்டு.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் இன்று பேட்டியின் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

பாஜகவின் தமிழக மாநில தலைவர் அண்ணாமலையின் பொறுப்பற்ற தவறான பேச்சுக்கு நேற்றைய தினம் எங்களின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்கள் பெருந்தன்மையோடு ஒரு கண்டன தீர்மானத்தை மட்டும் நிறைவேற்றினார். அந்த கண்டன தீர்மானத்திற்கு பதிலளிக்கும் விதமாக கூட்டணியில் இருப்பதற்காக மற்ற கூட்டணி கட்சிகளின் எண்ணத்திற்கு ஏற்ப கருத்து கூறுவது பொறுத்தமற்றது என அண்ணாமலை கூறிள்ளார்.

கூட்டணி கட்சியில் இருப்பதால் கூட்டணி கட்சிகளிண் எண்ணத்திற்கு ஏற்ப செயல்பட முடியாது என கூறும் அண்ணாமலைக்கு, கூட்டணி கட்சியில் இருந்து கொண்டே பிரதான கூட்டணி கட்சியான அதிமுகவை பற்றி குறை கூற எந்த நியாயமும் இல்லை என்பதை அண்ணாமலை உணர வேண்டும்.

திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு வலது, இடது கரமாக செயல்பட்டு வரும் மின்சார கலால்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை தற்போது எடுத்து வரும் நடவடிக்கையால் இந்திய அளவில் ஒட்டுமொத்த தமிழத்திற்கும் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. அமலாக்கத்துறையின் பெறப்பட்ட குற்றச்சாட்டுகளின் ஆதாரங்களை தலைமை செயலகத்தில் சட்டமன்றத்தில் தனது அமைச்சரவையில் செந்தில்பாலாஜி பதுக்கி வைத்ததின் அடிப்படையில் சட்டமன்றத்தில் உள்ள அமைச்சர் அறையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி பல்வேறு ஆதாரங்களை கைப்பற்றி உள்ளனர்.

இதுபோன்ற சோதனையின் போது தமிழக ஆளும் திமுக அரசை சார்ந்தவர்கள் வானத்திற்கும் பூமிக்கும் குதித்து அமைச்சருக்காக தேசிய தலைவர்களிடம் எல்லாம் பேசி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துக்கொண்டிருப்பது சரியானது இல்லை.

தற்போது திமுக முதலமைச்சராக உள்ள திரு ஸ்டாலின் அவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு செந்தில் பாலாஜியை பற்றி பேசும் போது ஊழல், முறைகேடுகள், தன்னை எதிர்த்தவர்களை கொலை செய்ய மிரட்டுவது, அதிகார மையத்தில் உள்ள பெண்களுடனான தொடர்புகள் போன்ற குற்றச்சாட்டுகளை செந்தில் பாலாஜி மீது சுமத்தினார். அவரது குற்றச்சாட்டை தொடர்ந்து தற்போது நடைபெறும் அமலாக்கத்துறை சோதனையின் போது செந்தில் பாலாஜிக்கா வரிந்து கட்டிக்கொண்டு துணை போவது ஏன் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மாதத்திற்கு சுமார் 300 கோடி ரூபாய்க்கு மேல் கலால்துறையில் மட்டும் லஞ்சமாகவும், முறைகேடாகவும் பெற்று ஸ்டாலின் குடும்பத்திற்கு வரி செலுத்தி வந்தவர் தான் செந்தில் பாலாஜி. அந்த பாசத்தில் தான் என்ன செய்கிறோம் என்று செய்வதரியாது திகைத்து நிற்கிறார். தனது கூட்டணி கட்சிகளின் தேசிய தலைவர்களிடம் வற்புறுத்தி செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக அறிக்கைவிட வைக்கிறார்.

கடந்த அதிமுக ஆட்சியில் தலைமை செயலகத்தில் சோதனை நடைபெற்ற போது குற்றத்திற்கான ஆதாரங்கள் தலைமை செயலாளர் அறையில் இருப்பதால் சோதனை செய்யத்தானே செய்வார்கள் என்று வியாக்கானம் பேசியவர் அப்போதைய எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் ஆவார். தற்போது குற்றச்சாட்டுக்கான ஆதாரங்கள் சம்பந்தப்பட்ட அமைச்சர் அறையில் இருப்பதற்கு நடைபெற்ற சோதனைக்கு மாநில உரிமை பறிபோய்விட்டது. கூட்டாட்சிக்கு எதிரானது என்று திரு ஸ்டாலின் கூறுவது வியப்பாக உள்ளது.

செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து இந்த ஊழல் நடைபெற்றதாக இருந்தால் ஸ்டாலின தலைமையிலான இந்த அமைச்சரவையையும், அரசையும் மத்திய அரசு உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.

இளநிலை மருத்துவ கல்வியில் இந்திய அளவில் பொது கவுன்சில் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது மாநில உரிமையை பறிக்கும் செயலாகும். தமிழகம் மட்டுமல்ல புதுச்சேரியிலும் இடஒதுக்கீடு, உள் ஒதுக்கீடு, பிராந்திய ரீதியான ஒதுக்கீடுகள் பாதிக்கப்படும். தமிழகத்தில் மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் கொண்டுவந்த அரசு பள்ளி மாணவர்களுக்கான ஏழரை சதவீத உள்ஒதுக்கீடு பாதிக்கப்படும். அதனால் தான் மாணவர்களின் நலனுனுக்காக எங்களது பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்கள் இந்த தேசிய அளவிலான மருத்தவ கவுன்சிலிங் திட்டத்தை உறுதியாக எதிர்த்துள்ளார்.

இந்த தேசிய அளவிலான பொது கவுன்சிலால் புதுச்சேரியில் மாணவர்கள் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள். ஆனால் துணைநிலை ஆளுநர் தமிழிசை இதனால் மாணவர்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என கூறுவது ஏற்புடையது அல்ல.

மத்திய அரசாங்கத்தின் இந்த மாணவர்கள் விரோத செயலை புதுச்சேரி அரசு உறுதியாக எதிர்க்க வேண்டும். முதலமைச்சர் ரங்கசாமி உடனடியாக அமைச்சரவையை கூட்டி இதில் சரியான முடிவை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

உடன் மாநில கழக பொருளாளர் ரவி பாண்டுரங்கன், புதுச்சேரி நகர கழக செயலாளர் அன்பழகன் உடையார் ஆகியோர் உடனிருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...