முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நலத்திட்டங்களை பெற மீனவர்களை இழிவுபடுத்தும் புதுச்சேரி அரசுக்கு அதிமுக கண்டனம்.!

புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla., திரு.வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புதுச்சேரி அரசும், முதலமைச்சரும் அறிவிக்கும் திட்டங்கள் எதுவும் காலத்தோடு மக்களை சென்றடைவது கிடையாது. அரசின் நலத்திட்டங்கள் எப்போது கிடைக்கும்? என மக்கள் காத்திருந்து, காத்திருந்து காலம்தான் உருண்டோடுகிறது. பெண்களுக்கு ரூ.ஆயிரம் உரிமைத்தொகை, மாணவர்களுக்கு லேப்டாப், இளநிலை, மேல்நிலை எழுத்தர் தேர்வு உட்பட முதலமைச்சரின் எந்த அறிவிப்பும் அவர் கூறியபடி காலத்தோடு நடைமுறைக்கு வந்ததாக சரித்திரம் இல்லை. 3 தொகுதி மக்களை தவிர பிற தொகுதியை சேர்ந்த பொதுமக்கள் நலத்திட்டங்களை பெறுவதற்கு படும் துயரம் சொல்லி மாளாது.

இந்த சூழ்நிலையில் புதுச்சேரி மீன்வளத்துறை சார்பில் மீனவர்களின் தனிநபர் விபரம், குடும்ப விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி அரசின் எந்த துறையிலும் இப்படி அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டது கிடையாது. மீன்களை பிடிக்கிறாயா? மீன்களை விற்கிறாயா? எந்தெந்த தெருக்களில் விற்கிறாய்? குடும்பத்தில் எத்தனை பேர்? அவர்கள் படித்துள்ளார்களா? மீன்பிடிக்கிறார்களா? வேறு வேலைசெய்கிறார்களா? எந்த மாவட்டத்தில் வேலை செய்கிறார்கள்? அவர்களின் புகைப்படம் எங்கே? என கொடும் குற்றவாளிகள் போலவும், அரசின் நலத்திட்டங்களை
பெறுவதற்காக, போலியான தகவல்களை அளித்து மாபெரும் துரோகம் இழைப்பவர்கள் போலவும் மீனவ சமுதாய மக்களை இந்த என்ஆர்.காங்கிரஸ் அரசு கொச்சைப்படுத்துகிறது.

படிவத்தின் இறுதி உறுதிமொழியிலும், தவறான தகவல்களை தெரிவித்தால், தண்டனை சட்டங்களின் கீழ் வழக்கு தொடர சம்மதமும் கோரப்பட்டுள்ளது. இதற்குமேல் மீனவ சமுதாய மக்களை புதுச்சேரியை ஆளும் அரசும், முதலமைச்சரும் இழிவுபடுத்த முடியாது. மீனவ சமுதாய மக்களுக்கு இனி எந்த சலுகையும் கிடையாது? என்பதை இந்த படிவம் மூலம் என்.ஆர்.காங்கிரஸ் அரசு வெளிப்படுத்துகிறதா?

முத்தியால்பேட்டை தொகுதி சோலை நகர் வடக்கு, தெற்கு உட்பட புதுச்சேரி மாநிலத்தில் வாழும் 18 மீனவ கிராம பஞ்சாயத்தில் வாழும் பெரும்பாலான பாமர, படிப்பறிவற்ற மீனவ சமுதாய மக்களை என்ஆர்.காங்கிரஸ் அரசு மறைமுக வஞ்சிக்க நினைக்கிறதா? மீனவ சமுதாய மக்களை இழிவுபடுத்துவதை அதிமுக சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

தேர்தலுக்கு தேர்தல் பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி, மீனவ சமுதாய மக்களின் ஓட்டுகளை மட்டும் வேட்டையாடும் போலி கபடநாடகம் இனியும் எடுபடாது. மீன்வளத்துறை வழங்கி வரும் இந்த படிவத்தை உடனடியாக இந்த அரசு திரும்பப்பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...