போர்க்கால அடிப்படையில் அரசு பள்ளி கட்டிங்களை மேம்படுத்த வேண்டும்.! இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்.!
இந்திய மாணவர் சங்கத்தின் புதுச்சேரி செயலாளர் பிரவீன் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஸ்மார்ட் சிட்டி திட்டம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி திட்டம் ஆகியவைகள் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவு புதுச்சேரி நகர்புற அரசு பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதும் முக்கியம். ஆனால் இன்றைக்கு ஆளக்கூடிய ஆளும் என்.ஆர் காங்கிரஸ் மற்றும் பிஜேபி கூட்டணி அரசாங்கம் நகர்ப்புற அரசு பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் பெரும் தோல்வி அடைந்திருக்கிறது இது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல இதை இந்திய மாணவர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
ஒன்றிய பிஜேபி அரசுக்கு ஆதரவான ஒரு அரசாங்கம் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால் தாராளமாக நிதி கிடைக்கும் புதுச்சேரியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முடியும் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்றைக்கு புதுச்சேரி கல்வித்துறையில் ஒட்டுமொத்தமாக எந்த ஒரு நிதியும் ஒதுக்காமல் அரசு பள்ளிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தாமல் கல்வித் துறையை சீரழித்துள்ளது. குறிப்பாக நகர்புறத்தில் தொடர்ச்சியாக பழமை வாய்ந்த அரசு பள்ளி கட்டிடங்களை புணரமைக்காமல் இடியும் நிலை வரை காலம் கடத்தி பள்ளி மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்றுவது இடப்பற்றாக்குறை, ஆசிரியர் பற்றாக்குறை என தொடர்ந்து புதுச்சேரி அரசாங்கம் தோல்வியுற்று வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக கோடை விடுமுறை முடிந்து நேற்றைய தினம் பள்ளிகள் துவங்கப்பட்டது ஆனால் பள்ளிகள் துவங்கப்பட்ட முதல் இரண்டு நாட்களும் நகர்ப்புறத்தில் பல இடத்தில் அரசு பள்ளி மாணவர்கள் இடப்பாற்றாக்குறை காரணமாக மாணவர்களும் பெற்றோர்களும் தன் எழுச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
கோடை விடுமுறை முழுவதும் அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கு உட்கட்டமைப்பு வசதிகளை சரி செய்வதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துவிட்டு பள்ளிகள் திறந்தபின் இரண்டு பள்ளிகளை ஒரே கட்டிடத்தில் நடத்துவது அரைநாள் சுழற்சி முறையில் நடத்துவது என்ற அரசின் தவறான முடிவால் இன்றைக்கு இரண்டு நாட்களாக வீரமாமுனிவர், திரு.வி.க மற்றும் சுப்ரமணிய பாரதியார் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களில் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையெல்லாம் அரசு கவனத்தில் கொண்டு உடனடியாக போர்க்கால அடிப்படையில் நகர்ப்புற அரசு பள்ளி மாணவர்களின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி மாணவர்களுக்கு முறையான கல்வியை கிடைப்பதை உத்திரவாதப்படுத்த வேண்டும் இல்லையேல் இதே நிலைமை தொடரும் பட்சத்தில் இந்திய மாணவர் சங்கம் அனைத்து பள்ளி மாணவர்களையும் ஒன்று திரட்டி சட்டமன்றத்தை முற்றுகையிடக்கூடிய ஒரு போராட்டத்தை மேற்கொள்ளும் என்பதை எச்சரிக்கையோடு இந்த நேரத்தில் அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக