புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla., திரு.வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,
மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்ற தாரக மந்திரத்தை உலகிற்கு எடுத்துக்கூறி, அதேபோல வாழ்ந்து காட்டியவர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். நீங்கள் களங்கம் ஏற்படுத்த நினைக்கும் *இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் போயஸ் கார்டன் வீட்டில் உங்கள் கட்சியை சேர்ந்த வட இந்திய தலைவர்கள் காத்துக்கிடந்த உண்மையான வரலாறு தெரியாமல்* தான்தோன்றித்தனமாக தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். இதை புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர்களை மீறி அவர் செயல்படுகிறார். அதிமுகவுடன் கூட்டணி தொடரக்கூடாது என்ற எண்ணத்தோடு அவர் செயல்படுவது அப்பட்டமாக தெரிகிறது. *உண்மையில் தைரியமும், தெம்பும் இருந்தால் தமிழ்நாட்டை விடுங்கள், வரும் பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரியில் மட்டுமாவது அதிமுகவின் துணை இன்றி பாரதீயஜனதா கட்சி தனித்து போட்டியிட்டு, டெபாசிட் வாங்க திராணி உள்ளதா?*
புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் ஆசியோடு அதிமுகவை ராணுவ கட்டுக்கோப்போடு அன்பிற்கும், பாசத்திற்கும் உரிய கழக நிரந்தர பொதுச்செயலாளர் அண்ணன் திரு.எடப்பாடியார் அவர்கள் நடத்தி வருகிறார். அவர் உத்தரவிட்டால் தென் இந்தியாவில் பாரதீயஜனதா கட்சி அதிமுக தொண்டர்களால் ஓட, ஓட விரட்டியடிக்கப்படும். கழகம் எனும் தேன்கூட்டில் அண்ணாமலை கல்வீசி பார்க்க நினைக்கிறார். இதனால் ஏற்படும் விபரீதத்தை அண்ணாமலையால் தாங்கிக்கொள்ள முடியாது.
*நன்றி மறப்பது நன்றன்று,* தனது அநாகரீகமான பேச்சுக்கு தமிழ்நாடு பாரதீயஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கோரி, உடனடியாக தனது கருத்தை வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் கோடான கோடி அதிமுக தொண்டர்களின் உள்ளக்கொதிப்பை சந்திக்க நேரிடும் என புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் எச்சரிக்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக