புதுச்சேரி சுயேட்சை எம்எல்ஏ நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தியாவில் மற்ற மாநிலங்களில் உள்ளது போல் புதுச்சேரியிலும் மாதிரி மருத்துவமனை அமைய வேண்டும் என்பது அனைத்து தொழிலாளர்கள் விருப்பம். காரணம் எல்லா நோய்களுக்கும் ஒரே இடத்தில் சிகிச்சை பெற முடியும் என்பது அவர்கள் எதிர்பார்ப்பு.
தொழிலாளர்களிடம் அவர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுகின்ற தொகையில் இருந்து தான் இந்த திட்டம் செயல்படுகிறது. ஆனால் புதுச்சேரியில் அந்த திட்டப்படி தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதி கிடைக்கவில்லை. இந்தியாவிலே Model Hospital இல்லாத மாநிலமாக புதுச்சேரி மாநிலம் உள்ளது. புதுச்சேரியில் ESI Model Hospital இல்லாததால் தொழிலாளர்கள் தனியார் மருத்துவமனைகளில் லட்சகணக்கில் செலவு செய்து மருத்துவம் பார்த்துக்கொள்ளும் நிலை உள்ளது. இஎஸ்ஐ தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து மருத்துவத்திற்கான பணம் பிடிக்கப்படுகிறது. அப்படி உழைத்து சம்பாதித்த பணத்தை இஎஸ்ஐக்கு பிடித்தம் செய்து கட்டிய பிறகும் அவர்களுக்கான இலவச சிகிச்சை கிடைக்காமல் இருப்பது தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.
மத்திய இஎஸ்ஐ கார்ப்பரேஷன் அந்தந்த மாநிலங்களில் Model Hospital அமைக்க 1975ல் தகுந்த இடங்களில் பெற்று சிறந்த மருத்துவமனைகளை நிறுவி வருகிறது. அதேபோல மத்திய இஎஸ்ஐ கார்ப்பரேஷன் நம் புதுச்சேரி மாநிலத்திலும் ESI மருத்துவமனையை அனைத்து வசதிகளுடன் இருக்ககூடியதாக செயல்ப வேண்டும் என்ற நோக்கத்தில் Model Hospitalஐ அமைக்க அனுமதியளித்துள்ளது.
இந்த மருத்துவமனை கட்டுவதற்கான, முழுசெலவையும் மத்திய இஎஸ்ஐ
கார்ப்பரேஷன் ஏற்கிறது. இதற்கு புதுச்சேரி மாநில அரசும், துணைநிலை ஆளுநரும் ஒப்புதல் கொடுத்துள்ளனர். தற்போது அதற்குண்டான இறுதிக்கட்ட கோப்பு முதல்வர் அவர்களின் ஒப்புதலுக்கு உள்ளதாக தெரிகிறது. இந்த ESI Model Hospital வந்தால் தான் புதுச்சேரி அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை குறையும். ஏன் என்றால் புதுச்சேரியில் ஏறக்குறைய மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு நோய்பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது அவர்களது குடும்பத்தில் உள்ள பெற்றோர் மற்றும் குழந்தைகளக்கு நோய்பாதிப்பு ஏற்பட்டால் இங்கு போதிய வசதியில்லாமல் இங்கு செயல்படும் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுகிறார்கள். அங்கு போதுமான மருத்துவசிகிச்சை கிடைக்காமல் அவதிக்குள்ளாகிறார்கள். இதனால் அவர்கள் உயர்சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு வருகிறார்கள். அரசு மருத்துவமனைகளில் போதிய இட வசதி இல்லாததாலும், போதிய படுக்கைவசதி இல்லாததாலும், அவர்களுக்கான சிகிச்சை கிடைக்காமல் சிரமப்படுகிறார்கள். அரசு மருத்துவமனைகளில் அவர்களுக்கான உயர்சிகிச்சை கிடைக்காமல் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று அதிக பண செலவு செய்து சிகிச்சை பெற வேண்டிய நிலை உள்ளது. இதனால் அவர்கள் கடனாளியாக மாறிவருகிறார்கள்.
இஎஸ்ஐ மருத்துவமனையின் தற்போதைய நிலைமைகள் பற்றி கீழ்வருமாறு விவரிக்கப்படுகிறது.
1. பொது மருத்துவத்திற்கான மருத்துவர் இல்லை.
2. காது, மூக்கு, தொண்டைக்கான மருத்துவர் இல்லை. மேலும் அவற்றுக்கான
உபகரணங்களும் இல்லை.
3. கண் மருத்துவர் இல்லை
4. மகப்பேறு மருத்துவர் இல்லாததால், இங்கு பிரசவம் பார்ப்பது இல்லை.
5. எலும்பு முறிவு சிகிச்சைக்கான மருத்துவர் இல்லை. ஆதனால் எலும்பு முறிவு
அறுவை சிகிச்சை நடைபெறுவது இல்லை.
6. தோல் வியாதிக்கான மருத்துவர் இல்லை.
7. கதிரியக்க நிபுணர் (RADIOLOGIST) இல்லை. அதனால் இங்கு ஸ்கேன் பார்ப்பது இல்லை. 8. பல் மருத்துவத்திற்கான நவீன உபகரணங்கள் இல்லை.
9. டைலர் இல்லை
10. Barber இல்லை
11.நவீன அறுவை கூடம் மற்றும் வெண்டிலேட்டர் இல்லை.
12. சமையல் கூட உதவியாளர் இல்லை.
13. வார்ட் அட்டெண்டர் பணியில் இருந்த அனைவரும் தற்போது பணியில் இல்லை. அவர்களுக்கு பதிலாக தற்காலிக ஒப்பந்த பணியாளர்கள் பணி செய்கிறார்கள்.
14. இரத்த பரிசோதனை கூடத்தில் சர்க்கரை மற்றும் இரத்த அழுத்த பரிசோதனை மட்டும் பார்க்கபடுகிறது. மற்ற பெரும்பாலான முக்கிய பரிசோதனைகள் பார்க்கப்படுவதில்லை.
15. மருத்துவமனைக்கென மருத்துவ அவசர ஊர்தி (Ambulance) இல்லை.
16. மருத்துவமனைக்கென தனியாக பாதுகாவலர்கள் இல்லை. மருத்துவமனையில் தொலைக்காட்சி மற்றும் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்படவில்லை.
17. மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு காலை இட்லி பொங்கல், கிச்சடி வழங்கபடவேண்டும். ஆனால் ரொட்டி, பால் மட்டும் தான் வழங்கப்படுகிறது.
மேற்கண்ட நிலையில் செயல்படும் புதுச்சேரி இஎஸ்ஐ மருத்துவமனையை (Model Hospital) மாதிரி மருத்துவமனையாக கட்டமைத்தால் தொழிலாளர்கள் அல்லல்படும் நிலைமை மாறி அவர்களுக்கான உரிய உயர்சிகிச்சை நம் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு நேரடியாக கிடைப்பதுடன் அவர்களது குடும்பத்தாரும் இதன் மூலம் பயன்பெறுவார்கள். மேற்கண்ட நிலைமைகளை கருத்தில் கொண்டு நம் மாநிலத்தில் இஎஸ்ஐ (Model Hospital) மாதிரி மருத்துவமனை துரிதமாக கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இதன்மூலம் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக