புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் ஆனந்தபாபு நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புதுச்சேரி அரசு பணிக்கான குரூப்-B நேரடி ஆட்சேர்ப்பில் வயது வரம்பை இரண்டு ஆண்டுகள் தளர்த்துவதற்கான முன்மொழிவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளிக்காதது வேதனை அளிக்கிறது.
அரசு வேலைக்கான வயது உச்ச வரம்பை தளர்வு பெற மத்திய உள்துறை அமைச்சகத்தை அணுகியது தவறு. மாநில அமைச்சரவை பரிந்துரையின் பேரில் துணைநிலை ஆளுநர் அவர்கள் அனுமதி வழங்க முடியும். வயது வரம்பு தளர்வு பெற மத்திய உள்துறை அமைச்சகத்தை அணுகியது மூலம் ஆளும் என் ஆர், பி ஜே பி அரசாங்கம் புதுச்சேரி மாநில இளைஞர்களுக்கு துரோகம் இழைப்பதோடு இளைஞர்கள் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி அவர்கள் வாழ்க்கையில் விளையாடிக் கொண்டிருக்கிறது.
புதுச்சேரி அரசு பள்ளியில் டி ஜி டி அதாவது கிராஜுவேட் டீச்சர் அப்பாயிண்ட்மெண்ட் 2010ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெறவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் இளைஞர்களுக்கு அரசு பணியிடங்களை வழங்குவதற்கு முயற்சி செய்தபோது மத்திய பிஜேபி அரசும் அப்போதைய கவர்னரும் தடையாக இருந்தனர். ஒரு இளைஞர் 2010ல் பி.எட் படித்திருந்தால் அவருக்கு வயது அப்போது 23 ஆகும் அவருக்கு இப்பொழுது 36 வயது ஆகும். 13 ஆண்டுகள் பிறகு அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர் தேர்வு மற்றும் பிற அரசு வேலைக்கான தேர்வுகள் நடைபெற உள்ளது அதனால் இந்த இரண்டு ஆண்டு வயது வரம்பு தளர்வே குறைவானது. தேர்வில் அனைத்திலும் இளைஞர்களுக்கு வயது உச்சவரம்பை தளர்த்த வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் இளைஞர்களும் இந்த அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
ஆனால் கடந்த வாரம் வந்து அறிவிப்பு பல இளைஞர்களுக்கு பேரிடியாய் அமைந்துள்ளது. இளைஞர்கள் தேர்வில் பங்கேற்று அதில் வெற்றி பெற வில்லை என்றால் அது ஏற்புடையது. ஆனால் நீங்கள் அரசாங்க வேலைக்காக இரவும் பகலும் படித்துக் கொண்டு இருக்கும் இளைஞர்களை தேர்வில் வயது அடிப்படையில் பங்கேற்க விடாமல் தடுப்பது அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மாண்புமிகு முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் பத்தாயிரம் இளைஞர்களுக்கு வேலை வழங்குவேன் என்று வாக்குறுதி அளித்தார். அதன் அடிப்படையில் பதவி ஏற்ற உடனே அரசு காலி பணியிடங்களை நிரப்பி இருந்தால் இத்தகைய சூழ்நிலை ஓரளவு தவிர்க்கப்பட்டிருக்கும். பதவி ஏற்று மூன்று ஆண்டுகள் கடந்தும் அவர் வழங்கிய வேலைவாய்ப்பு மிகவும் சொற்பமே. மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே அரசாங்கம் அதாவது இரட்டை இன்ஜின் சர்க்கார் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செய்ய முடியும் என்று பிரச்சாரம் செய்தீர்கள் ஆனால் அது என்ன ஆனது. இப்பொழுது. இந்த இரட்டை இன்ஜின் சர்க்காரின் நிலைப்பட்டால் பல்வேறு இளைஞர்களின் கனவு கானல் நீராக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க முடியவில்லை என்றால் மாண்புமிகு முதல்வர் ரங்கசாமி அவர்கள் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் மூலம் தெளிவாக தெரிகிறது மக்கள் இரட்டை இன்ஜின் அரசாங்கத்தை புறக்கணிக்கிறார்கள் என்று. இந்த அரசாங்கம் இதை புரிந்து கொண்டு இளைஞர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்க வேண்டும். அவ்வாறு செய்ய முதல்வர் தவறினால் புதுச்சேரி உள்ள இளைஞர்களை ஒன்று திரட்டி இளைஞர் காங்கிரஸ் மிகப் பெரிய போராட்டத்தை நடத்தும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக