முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜிப்மர் செவிலியர் பணியிடம்; 25% இட ஒதுக்கீடு வழங்க கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்..!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி மாநில செயலாளர் அ.மு.சலீம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக, மத்திய அரசின் பல்வேறு நிறுவனங்கள் புதுச்சேரியில் அமைந்திட, மாநில அரசின் சார்பில் நிலம், மின்சாரம், சாலை வசதி போன்ற கட்டமைப்புகள் வழங்கப்பட்டது. இதற்காக புதுச்சேரியை சேர்ந்த மக்களுக்கு இட ஒதுக்கீடும் உறுதி செய்யப்பட்டது. 

மத்திய அரசின் நேரடி கண்காணிப்பில் செயல்படும் ஜிப்மர் மருத்துவமனை புதுச்சேரி மாநில மக்கள் மட்டுமின்றி தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களும் மருத்துவ உதவி பெற்றிடும் நிலையில் உள்ளது. இந்த ஜிப்மர் மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் புதுச்சேரியை சார்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்தது.‌ காலப்போக்கில் ஜிப்மர் நிர்வாகத்தின் தவறான நடவடிக்கையினாலும் புதுச்சேரி மாநில அரசின் அலட்சியப் போக்கினாலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் புதுச்சேரி சார்ந்தவர்களுக்கு உரிய இடங்கள் கிடைக்கப்பெறாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில் ஜிப்மர் நிர்வாகம் தற்போது 165 செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணியிடங்களில் புதுச்சேரியினை சார்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. கடந்த காலங்களில் ஜிப்மர் மருத்துவமனைக்கு தேர்வாகி பணிக்கு வருகின்ற செவிலியர்கள் சில ஆண்டுகளில் மத்திய அரசின் பிற மருத்துவமனைகளுக்கு இடமாறுதல் பெற்று சென்று விடுகின்றனர். இதனால் ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து செவிலியர் பற்றாக்குறை நிலவி வருகின்றது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் ஆயிரக்கணக்கானோர் செவிலியர் படிப்பு முடித்து வேலைக்காக காத்திருக்கின்றனர் அவர்களுக்கு தற்போது ஜிப்மர் நிர்வாகம் தேர்வு செய்ய உள்ள செவிலியர் பணியிடங்களில் 25% இட ஒதுக்கீடு வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும். 

நாட்டிலேயே வேலையற்ற இளைஞர்கள் அதிகம் உள்ள மாநிலமாக புதுச்சேரி உள்ளது எனவே மாநில என்.ஆர்.காங்கிரஸ்- பிஜேபி அரசு மத்திய அரசின் நிறுவனங்களில் புதுச்சேரி மாநிலத்திற்கான இட ஒதுக்கீட்டினை பெற்றிட உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...