இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் - 4 அம்ச - பட்ஜெட் என அறிவித்து இவர்களுக்கு பிரயோஜனமில்லாத பட்ஜெட்டாக இருக்கிறது.
விவசாயிகளுக்கு ஏற்கனவே குறைந்தபட்ச ஆதார விலை (MSP) அறிவித்ததால் விவசாயிகள் பலனடைந்துள்ளனர் என்ற புளுகு மூட்டையை அவிழ்த்து உள்ளார். தில்லி விவசாயிகள் போராட்டத்திற்கு பிறகு மத்திய அரசும்- விவசாயிகள் போராட்ட குழுவினருக்கும் ஏற்பட்ட ஒப்பந்தம் என்பது அனைத்து விவசாயிகளுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை வேண்டும் என்பதுதான் இது நிறைவேற்றப்படவில்லை.
கடந்த காலத்தில் பொய்யான வாக்குறுதி அளித்தது போன்றே..... இப்போது 5 ஆண்டுகளில் 4 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என்ற அறிவிப்பு- எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே எனும் பாடல் வரி தான் நினைவுக்கு வருகிறது.
ஏழைகள் வாழ்வு மேம்பாட்டிற்காக எந்த திட்டமும் இல்லை. 80 கோடி பேர் ஏழ்மையிலும், வறுமையிலும் இருக்கிறார்கள் என்று நிர்மலா சீதாராமன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
SC, ST, விஸ்வகர்மா மேம்பாட்டு சமூக நீதி திட்டம் .... என்பது மனுதர்ம கருத்தியலால் மனித ஏற்றத்தாழ்வுகளை உறுதி செய்வதாகும்.
தனிப்பெரும்பான்மை இல்லாத சூழலால் கூட்டணி கட்சிகளை திருப்திபடுத்த பீகார், ஆந்திர மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீட்டை அறிவித்துள்ளார்கள்.
ஆனால்.... பிஜேபி ஆட்சி இல்லாத மாநிலங்கள் ஓரவஞ்சனை செய்யப்பட்டுள்ளன. கூட்டாட்சி முறைக்கு எதிரான தாக்குதல் மீண்டும் ஒருமுறை நிகழ்த்தப்பட்டுள்ளது.
குறிப்பாக யூனியன் பிரதேசமான புதுச்சேரி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.தொழிலாளர்களுக்கு விடுதி வேண்டாம்- வீடுகள்தான் வேண்டும்.மின்சாரம்- கட்டமைப்பு துறைகளில் தனியார் ஊக்குவிக்கப்படுகிறது.சுற்றுலா மேம்பாடு எனும் பெயரில் மதவாத அரசியலை வளர்ப்பதற்கு திட்டம் தீட்டப்படுகிறது. 15 தொழில் பூங்கா அறிவிக்கப்படுகிறது. ஆனால்... ஜவுளி பூங்காவை பற்றி எதுவும் சொல்லப்படவில்லை.
கடந்த காலத்தில் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வரி குறைக்கப்பட்டது, தற்போது இன்னும் எளிமைப்படுத்தப்படும் என்று கார்ப்பரேட் கம்பெனிகளுக்கான பட்ஜெட் என்று நிரூபணம் ஆகியிருக்கிறது.
பொதுவாக ஏழைகள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என்று வார்த்தைகள் இருக்கிறதேயன்றி - இவர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கான உருப்படியான எந்த திட்டமும்- நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் இல்லை.
குறிப்பாக புதுச்சேரி மாநிலம் மீண்டும் ஒருமொருமுறை வஞ்சிக்கப்பட்டு இருக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக