முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றம்.! என்.ஆர்‌ காங்கிரஸ் எம்எல்ஏ மீது அதிமுக குற்றச்சாட்டு

புதுச்சேரி அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளர் தமிழ் வேந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அரியாங்குப்பம் தொகுதியில் அஇஅதிமுக கூட்டணி சார்பில் என்.ஆர் காங்கிரஸ் சார்பில் பாஸ்கர் (எ)தஷ்ணாமூர்த்தி அவர்களை, அதிமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் மற்றும் அரியாங்குப்பம் தொகுதி மக்கள் அரும்பாடுபட்டு வெற்றி பெறச் செய்தோம்..
 அவர் வெற்றி பெற்று சுமார் 4 ஆண்டுகள் கடந்தும் இதுவரை தொகுதி மக்களின் வளர்ச்சிக்காக எதுவும் செய்ததாக தெரியவில்லை.

 1)தான் வெற்றி பெற்றவுடன் மகளிர் சுய உதவிக் குழுவில் உள்ள பெண்களுக்கு சொசைட்டி மற்றும் கிராம வங்கி மூலம் சிறு வியாபாரம் செய்ய லோன் வாங்கித் தருவதாக கூறினார்!செய்தாரா?

2) அரியாங்குப்பத்தில் இருந்து நகரப்பகுதிக்கு சென்றடைய போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவிக்கும் பள்ளி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள், மற்றும் அவசர சிகிச்சைக்கு செல்பவர்கள் நிலை அறிந்து அதற்கென்று ஏதேனும் ஆளுகின்ற தன் சொந்த கட்சி முதல்வரிடம் சென்று ஏதேனும் மனு அளித்தாரா?அல்லது சட்டமன்றத்தில் இதற்கு குரல் கொடுத்தாரா? 

3) தொகுதியில் உள்ள படித்த பட்டதாரிகளுக்கு ஏதேனும் வேலை வாய்ப்பு முகாமை ஏற்படுத்தி கொடுத்துள்ளாரா? அதற்கு மாறாக தொகுதியில் மதுபான கடைகளை உற்பத்தி செய்வதில் ஆர்வம் காட்டியுள்ளார்! 

4) அரியாங்குப்பம் தொகுதியில் நிலத்தடி நீரானது, நாளுக்கு நாள் உப்பு கலந்த நீராக மாறி வருகிறது.அதை அருந்தும் அனைத்து மக்கள் மற்றும் குழந்தைகள் பல நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். அதற்காக ஏதேனும் புதிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்க சட்டமன்றத்தில் குரல் கொடுத்தாரா?

5) தொகுதியில் குற்றப் பின்னணியில் உள்ளவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஏதேனும் காவல்துறையிடம் மனு அளித்தாரா? 

6) இதற்கு மாறாக என்.ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ என்பதை மறந்துவிட்டு பிஜேபி எம்எல்ஏ போல் செயல்பட்டு வருகிறார்...

 தொகுதிக்கு எதுவுமே செய்யாத சட்டமன்ற உறுப்பினர் ஒரு பக்கம்.
வெறும் பணம் மட்டும் இருந்தால் போதும் நாம் நின்று வெற்றி பெற்று விடலாம் என்ற குறுகிய எண்ணத்தோடு சில காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் ஒரு பக்கம், இவர்களுக்கு மத்தியில் மக்களுக்காகவே தொடர்ந்து குரல் கொடுத்து வருவதோடு மட்டுமின்றி கடந்த 2024 பாராளுமன்றத் தேர்தலில் அரியாங்குப்பம் தொகுதியில் பிறந்து வளர்ந்த எனக்கு அஇஅதிமுக கழகப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களும், அதற்கு என்னை பரிந்துரை செய்த புதுச்சேரி மாநிலக் கழக செயலாளர் அன்பழகன் அவர்களும் அரியாங்குப்பம் தொகுதியின் முதல் பாராளுமன்ற வேட்பாளர் என்ற மாபெரும் ஒரு பெருமையை அரியாங்குப்பம் தொகுதி மக்களுக்கு சேர்த்தனர்.

மீண்டும் 2026 இல் நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் கழகம் வாய்ப்பு அளித்தால் அரியாங்குப்பம் தொகுதி மக்களின் வீட்டுப் பிள்ளையாகவும், ஒரு சாதாரண தொண்டனாகவும் சட்டமன்றத்தில் போராடி நம் மக்களுக்கு தேவையான தேவையான அனைத்து நலம் சார்ந்த திட்டங்களையும் பெற்றுத் தருவேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...