புதுச்சேரி மின்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
புதுச்சேரி வெங்கட்டா நகர் துணை மின் நிலையத்திலிருந்து வரும் உயர் மின்னழுத்தப் பாதையில் சில பரமாரிப்பு பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் கீழ்காணும் இடங்களிலும் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்படுகிறது.அதன்படி நாளை(28-02-2023) காலை 10:30 முதல் மதியம் 01:00 வரை பாரதி வீதி (நீடராஜப்பையர் வீதி முதல் சவரிராயலு வீதி வரை), மகாத்மா காந்தி வீதி, (நீடராஜப்பையர் வீதி முதல் சின்ன வாய்க்கால் வீதி வரை). சின்ன வாய்க்கால் வீதி (எஸ். எஸ். பிள்ளை விதி முதல் மகாத்மா காந்தி வீதி வரை), சவரிராயலு வீதி (பாரதி வீதி முதல் மகாத்மா காந்தி வீதி வரை), செயின்ட் தெரெசா வீதி (எஸ். எஸ். பிள்ளை வீதி முதல் மகாத்மா காந்தி வீதி வரை) மற்றும் குளத்துமேடு வீதி முழுவதும் மின்தடை ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக