காரைக்கால் மாவட்ட பாஜக செயற்குழு கூட்டம் மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் காரைக்காலில் நடைபெற்றது.
கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் சாமிநாதன்,புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் - பிஜேபி தலைமையிலான ஆட்சியை பொய் குற்றச்சாட்டுகளை முன் வைத்து நாராயணசாமி பேசி வருகிறார் என்றும் ஊழலை பற்றி பேச முதலமைச்சர் நாராயணசாமிக்கு தகுதி இல்லை என தெரிவித்தார். மேலும் தனது கட்சிக்காரர்களே நாராயணசாமியை புறக்கணித்து வருகின்றனர் என்றும்,2024 நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நின்று வலிமையை நிரூபிக்க முடியுமா என கேள்வி எழுப்பினார். விரைவில்
தொழிலதிபர் அதானிகும்,பிரதமர் நரேந்திர மோடிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை எனவும் தைரியம் இருந்தால் ஆதாரங்களை வெளியிட்டு நிரூபிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். பயத்தின் அடிப்படையில் நாராயணசாமி உளறி வருவதால், புதுச்சேரியில் விரைவில் காங்கிரஸ் கூடாரம் காலி ஆகி அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு திருப்பி வர வாய்ப்பே இல்லை என தெரிவித்தார்.
கருத்துகள்
கருத்துரையிடுக