புதுச்சேரியில் கலால்துறை உத்தரவை மீறி, வள்ளலார் தினத்தன்று கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியில் வள்ளலார் தினத்தை முன்னிட்டு புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இயங்கி வரும் மதுபான கடைகள், சாராயக் கடைகள் மற்றும் கள்ளுக்கடைகள் மூடப்பட்டன. மேலும் இதனை பயன்படுத்தி கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்பவர்களை பிடிக்க, புதுச்சேரி கலால் ஆணையர் சுதாகர் உத்தரவின் பேரில், தாசில்தார் சிலம்பரசன் தலைமையில் 3 பறக்கும் படைகள் அமைத்து, புதுச்சேரி நகரப்பகுதி மற்றும் கிராம பகுதி முழுவதும் தீவிரமாக சோதனை செய்து வந்தனர். சோதனையின் அடிப்படையில் சோரியாங்குப்பம், உறுவையார் அரியாங்குப்பம் (மணவெளி), ஐயன்குட்டிபாளையம் (தர்மபுரி) மற்றும் அரியூர் பகுதியில் கள்ளத்தனமாக மதுபானங்களை விற்பனை செய்த 3 நபர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு அவர்களிடம் இருந்து ரூபாய் 5250 மதிப்புள்ள சுமார் 2 லிட்டர் மதுபானம் மற்றும் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டன. மற்றும் அவர்களிடமிருந்து அபராதமாக ரூபாய் 38,000/-விதிக்கப்பட்டு அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டது.
கருத்துகள்
கருத்துரையிடுக