முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குப்பை வரி வசூலிப்பதா.! பாஜக கண்டனம்.!

*சட்டசபையில் முதலமைச்சர் முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்ட அறிவிப்பை ஏற்று, குப்பை வரி வசூல் செய்வதை அதிகாரிகள் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என பாஜக மாநில தலைவர் சாமிநாதன் வலியுறுத்தியுள்ளார்*

புதுச்சேரி பாஜக மாநில தலைவர் சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புதுச்சேரி மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பொறுப்பேற்றவுடன் முதலமைச்சர் ரங்கசாமி சட்டமன்றத்தில் வரி நீக்கம் செய்து அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் உழவர்கரை நகராட்சி உள்ளிட்ட சில நகராட்சிகளில் குப்பை வரி செலுத்தும் பட்சத்தில் மட்டுமே வீட்டு வரி செலுத்த முடியும் என்று கட்டாயப்படுத்தி வருகின்றனர். இது போன்ற செயல்பாடுகளின் மூலம் அரசின் உத்தரவுகளை அலட்சியப்படுத்தும் வகையில் அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பை செயல்படுத்தாமல் அலட்சியம் காட்டி குப்பை வரி வசூல் செய்வது ஏற்றத்தக்கதல்ல.

அரசு அனுமதியின்றி தங்கும் விடுதிகள் மற்றும் கேளிக்கை விடுதிகள் செயல்பட்டு வருவதுடன் தொடர்ச்சியாக வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதையெல்லாம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் ஏழை மற்றும் நடுத்தர மக்களிடம் குப்பை வரி செலுத்துமாறு வலியுறுத்துவதை நிறுத்திவிட்டு அவர்கள் முறையாக வருடந்தோறும் செலுத்தி வரும் வீட்டு வரியை பெற்றுக் கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்