புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காங்கிரஸ் கட்சியின் நாராயணசாமி முதல்வராக இருந்த காலங்களில் ஏழை மக்களுக்கு வழங்க வேண்டிய அரிசி அல்லது அதற்கு பதிலாக பணம் வழங்கபடவில்லை. தேர்தல் வாக்குறுதியின்படி NDA அரசாங்கம் நேற்றைய தினம் 3 லட்சத்து 53 ஆயிரம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 67 கோடி ரூபாய் பணம் செலுத்தியுள்ளது. 1,58,000 சிகப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2,400 ரூபாய் வீதமும், 1,95,000 மஞ்சள் அட்டைதாரர்களுக்கு 1:200 ரூபாய் வீதமும் மாநில அரசு அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளது. மேலும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பொங்கல் பரிசாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.300 செலுத்தப்பட்டுள்ளது.
பாரதப் பிரதமர் நிருநரேந்திர மோடி ஜி தலைமையிலான மத்திய அரசு வறுமைகோட்டிற்கு கீழ் வாழும் ஏழை மக்கள் பயனடையும் வகையில் அவரவர் வங்கி கணக்கில் DFT மூலம் கடந்த வாரம் 13 கோடி ரூபாய் 1,58,000 ரூபாய் சிகப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே மத்திய மற்றும் மாநில அரசு புதுவை மாநிலத்தில் வசிக்கும் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் பொங்கல் பரிசாக சிகப்பு அட்டைதாரர்களுக்கு மொத்தம் 5000 ரூபாய் வீதம் வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் வரிப்பணத்தை ஊழல் இல்லாமல் நேர்மையான முறையில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் அவர்கள் வங்கி கணக்கில் செலுத்தி இருக்கும் பாரதப் பிரதமர் மற்றும் முதல்வருக்கு புதுச்சேரி மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த பணத்தின் மூலம் அனைவரும் சிறப்பான முறையில் பொங்கல் விழாவை கொண்டாடவும், ஓட்டுமொத்த புதுச்சேரி மக்களும் பயன்பெறும் வகையிலும், பொங்கலுக்கு முன்கூட்டியே பணம் வழங்கி இருப்பதன் மூலம் இந்த அரசு மக்கள் மீது வைத்திருக்கும் அக்கறையை வெளிப்படுத்துகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக