முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முதலமைச்சர் பதவி விலக அதிமுக வலியுறுத்தல்.!

புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla., வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,

புதுச்சேரி மாநிலத்திற்கு நல்லது நடக்கும், விமோசனம் பிறக்கும் என்ற நம்பிக்கை, கனவுகளோடு ஆட்சி எனும் அரிய பொக்கிஷத்தை மக்கள் வழங்கினார்கள். ஆனால் முதலமைச்சர் ரங்கசாமி, குழந்தையின் கையில் கிடைத்த விளையாட்டு பொம்மையாக, புதுச்சேரி மக்களை ஆட்டுவிக்கிறார். நல்வாழ்வு பிறக்கும் என நம்பியிருந்த புதுச்சேரி மக்களின் நம்பிக்கையை தவிடுபொடியாக்கி, விரக்தி, வேதனையின் எல்லைக்கு தள்ளியுள்ளார்.

சுத்தமான குடிநீருக்கு மட்டுமல்ல, பசியில் அழும் பச்சிளம் குழந்தைகளின் பாலுக்குக்கூட புதுச்சேரியில் தட்டுப்பாடு நிலவுகிறது. மக்களின் அடிப்படை தேவைகள், நலத்திட்டங்கள் எதையும் நிறைவேற்றவில்லை. இதுகுறித்து கேள்வி எழுப்பினால், மாநில அந்தஸ்து இல்லை, மன உளைச்சலில் உள்ளேன் என நீலிக்கண்ணீர் வடிக்கிறார். அதேநேரத்தில் மறுபுறம் கவர்ச்சி நடன பாருக்கு அனுமதி, மதுபான ஆலைகளுக்கு அனுமதி வழங்குகிறார். சாராய முதலாளிகளுக்காக அனைத்து சலுகைகளையும் சட்டத்தை வளைத்து செய்து தருகிறார்.

முதலமைச்சர் கையில் மாநில அந்தஸ்து என்ற அதிகாரம் இல்லாமலேயே தாராளமாக மது ஆறு ஓடுகிறது. மாநில அந்தஸ்து என்ற முழு அதிகாரமும் முதலமைச்சருக்கு கிடைத்தால் புதுச்சேரி மாநிலமே மது கடலாக மாறிவிடும் என மக்கள் அஞ்சுகின்றனர். மாநில அந்தஸ்து விவகாத்தில் முதலமைச்சர் ரங்கசாமி கபடநாடகம் ஆடுவதை புதுச்சேரி மாநில மக்கள் நன்றாக புரிந்துகொண்டுள்ளனர். இதனால்தான் காரைக்கால் பிராந்திய மக்கள் தங்களை தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்ற போராட்டத்தை பல ஆண்டாக நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி பிராந்திய மக்கள் மனதிலும் நீரு பூத்த நெருப்பாக மனதில் எரிந்துகொண்டிருந்த கனல் இப்போது வெப்பத்தை கக்க தொடங்கியுள்ளது. பாகூர் கொம்யூனை சேர்ந்த மூ.புதுக்குப்பத்தை சேர்ந்த மீனவ கிராம மக்கள், புதுச்சேரி மாநிலமே வேண்டாம். காசு கொடுத்து குடிநீர் வாங்குகிறோம், 3 முறை டெண்டர் வைத்தும் சாலை அமைக்கவில்லை. ஜனநாயகத்தின் வெளிப்பாடான கிராம சபை கூட்டத்தில் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியும் நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை. எங்கள் கிராமத்தை புதுச்சேரி ஆட்சிப்பரப்பிலிருந்து நீக்கி, தமிழகத்தோடு இணைத்து விடுங்கள் என மனு அளித்துள்ளனர்.

இதே எண்ணத்தோடுதான் புதுச்சேரியின் பல்வேறு கிராம மக்களும், மீனவ கிராம பஞ்சாயத்தினரும் உள்ளனர். முதலமைச்சரின் ஆட்சியால் புதுச்சேரி மக்களிடையே ஏற்பட்டுள்ள, இந்த எண்ணம் வரலாற்று பிழையாக மாறிவிடும். இந்திய வரைபடத்தில் இருந்து பாரம்பரியமும், பன்முக கலாச்சாரமும் கொண்ட புதுச்சேரி அழிந்துவிடும். அதிகார போதையால், புதுச்சேரி மாநில மக்களின் உரிமைகளை பலி கொடுத்துவிட வேண்டாம் என முதலமைச்சருக்கு அதிமுக சார்பில் எச்சரிக்கை செய்கிறோம்.

புதுச்சேரி மக்களிடையே எரியும் கனல் பற்றி எரிந்து புரட்சியாக வெடிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே முதலமைச்சர் தனது இயலாமை, மூப்பு ஆகியவற்றை ஒப்புக்கொண்டு இளைஞர்களுக்கு வழிவிட்டு அரசியலில் இருந்து விலகி ஓய்வெடுக்க வேண்டும். ஆட்சியை விடுத்து ஆன்மிக பாதைக்கு திரும்புவதுடன், இளைஞர்களின் ஆட்சிக்கு வழிகாட்டும் நல்ல ஆசானாக திகழ்வதே சாலச்சிறந்தது என புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் அறிவுறுத்துகிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...