புதுச்சேரி பாஜக மாநில தலைவர் சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புதுச்சேரி மாநிலத்தின் மக்களவை உறுப்பினர் வைத்தியலிங்கம் அவர்கள்,பாஜக எங்கே இருக்கிறது என்று கேட்டிருந்தார்.அவர் புதுச்சேரியில் உள்ளாரா? அல்லது வெளிநாட்டில் உள்ளாரா? என்பது தெரியவில்லை.
புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 9 சட்டமன்ற உறுப்பினர்களும், 3 ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ளனர் என்பதை மறந்து விட்டாரா.!
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உலகம் போற்றும் தலைவராக திகழ்ந்து வருகிறார். அவரது செயல்பாடுகள் மற்றும் உலகளாவிய தொலைநோக்கு சிந்தனையால் ஈர்க்கப்பட்டு எண்ணிலடங்காதோர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து வருகின்றனர். புதுச்சேரியிலும் பாரதிய ஜனதா கட்சி அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.
கடந்த 50 ஆண்டுகளாக புதுச்சேரியில் ஆட்சி செய்த காங்கிரஸ் காலங்களில், வைத்திலிங்கம் அவர்கள் புதுவையில் முதல்வராக, சபாநாயகராக, பாராளுமன்ற உறுப்பினராக செயல்பட்டு வந்துள்ளார். இவர் மாநிலத்தின் வளர்ச்சிக்காக என்ன செயல்களை செய்தார் என்று கூற முடியுமா? மது விற்பனை கடைகளை அதிகப்படுத்தி இளம் விதவைகளை அதிகம் உள்ள மாநிலமாக புதுச்சேரியை மாற்றிய பெருமை காங்கிரசையே சேரும்.!
புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியினர் தோல்வியை சந்தித்ததை மறந்து விட்டு என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் வைத்திலிங்கம் பேசுவது கண்டனத்திற்கு உரியது என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக