தொகுதி மக்களின் பிரச்சனைக்காக சட்டமன்ற உறுப்பினர்கள் போராடுவது அவர்களது உரிமை என்றும், ஏனாம் சுயேச்சை எம்எல்ஏ அசோக் முன்வைத்த 15 கோரிக்கைகளில் 5 கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்றி கொடுத்த நிலையில், மீதமுள்ள 10 கோரிக்கைகளையும் நிறைவேற்ற வலியுறுத்தி அசோக் எம்எல்ஏ உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.
முதலமைச்சர் ரங்கசாமி மீது நானும், ஏனாம் மக்களும் மிகுந்த மரியாதை வைத்துள்ளதாகவும், முதல்வரைப் பற்றி நான் எந்த விமர்சனமும் செய்யவில்லை என அசோக் எம்எல்ஏ தன்னிலை விளக்கம் அளித்துள்ள தாகவும்,மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முதல்வர் ஏனாம் வந்தால், அவர் பாதங்களில் மலர் தூவி வரவேற்பேன் என்று சொன்னதை திரித்து செய்தியாக்கப்பட்டுள்ளதாக அசோக் எம்எல்ஏ தன்னிடம் விளக்கம் அளித்துள்ளதாக கூறினார்.
அசோக் எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க கோரி என்.ஆர். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இதுவரை புகார் அளிக்கவில்லை என்றும்,மாநிலம் முழுவதும் என்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால்,இந்த விவகாரத்தில் முதலமைச்சர் ரங்கசாமியிடம் பேசி சமூக முடிவு எட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கருத்துகள்
கருத்துரையிடுக