அகில இந்திய காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்ட நாளை முன்னிட்டு, புதுச்சேரி ராகுல் காந்தி தேசிய பேரவை சார்பில் துப்புரவு பணியாளர்கள் உட்பட ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
அகில இந்திய காங்கிரஸ் கட்சி 1885 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி தொடங்கப்பட்டது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 138 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட தினத்தை கொண்டாடும் வகையில்,புதுச்சேரி ராகுல் காந்தி தேசிய பேரவை மற்றும் புதுச்சேரி காங்கிரஸ் ஊடக பிரிவு சார்பில் அனைத்து தொகுதிகளிலும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விழாவின் ஒரு பகுதியாக, துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு அரிசி, போர்வை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுச்சேரி ராகுல் காந்தி தேசிய பேரவை தலைவரும், புதுச்சேரி காங்கிரஸ் கட்சி ஊடக பிரிவு சேர்மான RE. சேகர் தலைமையில், காங்கிரஸ் கட்சி பொதுக்குழு உறுப்பினர் திருவேங்கடம் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி, பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி விழாவை துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாநில சிறப்பு அழைப்பாளர் வினோத், காங்கிரஸ் நிர்வாகி பிரபு, அசிஸ்ட் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவன ராஜேந்திரன், மற்றும் லயன் சங்கத்தின் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக