புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில், பாஜக மாநில வழக்கறிஞர்கள் அணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி மாநில தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மூத்த வழக்கறிஞர் பழனி ராஜா உழவர்கரை மாவட்ட அமைப்பாளர் ஜெயபால், வழக்கறிஞர் ஐயப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபடுவது, காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை ஆர்டிஐ மூலம் மக்களிடம் கொண்டு சேர்ப்பது, தொகுதி வாரியாக இலவச சட்ட ஆலோசனை கூட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் இக்கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக மகேஷ் ரெட்டி கலந்து கொண்டு நமோ ஆப் செயலி பயன்படுத்துவது குறித்து வழக்கறிஞர்களுக்கு என்று விளக்கம் அளித்தார்.
கூட்டத்தில் முன்னதாக பிரதமரின் தாயாருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் புதுச்சேரி மாநில பாஜக வழக்கறிஞர் அணியின் மாநில,மாவட்ட மற்றும் தொகுதி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக